Home கலை உலகம் தமிழ் இயக்குனர்கள் வேகமானவர்கள் – சோனாக்ஷி சின்ஹா பாராட்டு!

தமிழ் இயக்குனர்கள் வேகமானவர்கள் – சோனாக்ஷி சின்ஹா பாராட்டு!

501
0
SHARE
Ad

sonakshi-sinha-சென்னை, ஜூன் 12 – ரஜினிகாந்த் ஜோடியாக லிங்கா படத்தில் நடித்து வரும் சோனாக்ஷி சின்ஹா அந்தப் படம் வெளியானதும் தமிழ் ரசிகர்கள் மனதில் நிச்சயம் இடம் பிடிப்பார். அதே சமயம் தற்போதைக்கு சோனாக்ஷி சின்ஹா மனதில் தமிழ் இயக்குனர்கள் இடம் பிடித்து விட்டார்கள்.

சோனாக்ஷி இதுவரை நடித்துள்ள படங்களில் தமிழ் இயக்குனர்களின் படங்களில்தான் அதிகம் நடித்துள்ளார். பிரபுதேவா, ஏ.ஆர்.முருகதாஸ், கே.எஸ்.ரவிக்குமார் போன்ற தமிழ் இயக்குனர்களுடன் பணியாற்றிய அனுபவம் அவருக்குக் கிடைத்துள்ளது.

அதனால்தானோ என்னவோ தமிழ் இயக்குனர்களைப் பாராட்டித் தள்ளுகிறார்.  “தமிழ் இயக்குனர்களுடன் நான்கு படங்களில் நடித்து விட்டேன். அவர்கள் வேலை செய்யும் முறை கொஞ்சம் வித்தியாசமானது.

#TamilSchoolmychoice

அவர்கள் மிகவும் வேகமானவர்கள், நம்மிடம் என்ன தேவையோ அதை சரியாக கேட்டு வாங்கி விடுவார்கள். இந்தி இயக்குனர்களை விட மிகவும் வேகமாகப் பணியாற்றும் திறமைசாலிகள்,” என்கிறார்.

ஹாலிடே படத்தில் இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸுடன் பணியாற்றிய அனுபவத்தைப் பற்றிப் பேசும் போது, “அவருடன் பணியாற்றியது மிகச் சிறந்த அனுபவம். அவர் மிகவும் கண்டிப்பானர், நினைத்தது சரியாக வரும் வரை விடவே மாட்டார்.

ஒரு காட்சி எப்படி வரவேண்டுமென்று முன்னரே சரியாகத் திட்டமிட்டு படப்பிடிப்புக்கு வருவார். இந்த காட்சி இப்படித்தான் இருக்கும், இதுல நீங்க இப்படி நடிச்சால் போதும் என சொல்வார். அது எனக்கு ரொம்ப வித்தியாசமா இருந்தது. என்னை சுதந்திரமா செயல்பட வச்சது, என ” பாராட்டுப் பத்திரம் வாசிக்கிறார் சோனாக்ஷி.

அதனால்தான் ஏ.ஆர். முருகதாஸ் அடுத்து தயாரிக்க உள்ள படத்தில் சோனாக்ஷியே கதாநாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார். பெண்ணுக்கு முக்கியத்துவம் கொடுத்து இந்த படம் உருவாக்கப்பட உள்ளதாம். அதனால், மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறார் சோனாக்ஷி.