டோக்கியோ, ஜூன்16 – ஜப்பானின் புகுஷிமா பகுதியில் இன்று அதிகாலை இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டது.
ஜப்பான் நாட்டின் கிழக்குகடற்கரை பகுதியான புகுஷிமாவில் இன்று அதிகாலை இருமுறை நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
முதலாவது நிலநடுக்கம் ஹோன்ஷூவில் ரிக்டர் அளவுகோலில் 5.7 ஆக பதிவானது. அதன் பிறகு இரண்டு மணி நேரத்திற்கு பிறகு மற்றொரு முறை நிலநடுக்கம் உணரப்பட்டது. அது ரிக்டர் அளவு கோலில் 5.6 ஆக பதிவானது.
இந்த நிலநடுக்கம் குறித்து ஜப்பானில் எந்த தகவலும் வெளியாகவில்லை. மேலும், இதே பகுதியில் கடந்த 2011-ஆம் ஆண்டில் ஏற்பட்ட நிலநடுக்கம்தான் மிகப்பெரிய இயற்கைப் பேரழிவான சுனாமிக்கு வழி வகுத்தது என்பது குறிப்பிடத்தக்கது