புதுடில்லி, ஜூன் 20 – சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் துணை நிறுவனமான டைகர் ஏர்வேய்ஸ் ஹோல்டிங்ஸ் இந்த நிறுவனம் நடத்தி வந்த மண்டலா விமானச் சேவைகள் எதிர்வரும் ஜூலை 1ஆம் தேதி முதல் நிறுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
நஷ்டத்தில் இயங்கி வரும் மண்டலா நிறுவனத்தின் சேவைகள் இந்தோனேசியாவை தளமாகக் கொண்டு இயங்கி வந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் துணை நிறுவனமாக செயல்பட்டு வந்த டைகர் ஏர் அண்மைய காலங்களில் பெருத்த நஷ்டங்களை எதிர்நோக்கியதால் அந்த மறுசீரமைப்பு செய்யப்படுகிறது.
லாபம் தராத பயண வழித் தடங்கள் நிறுத்தப்படுவதோடு செயல்படாத விமானங்களும் சேவையிலிருந்து அகற்றப்படுகின்றன. மலிவு விலை விமான நிறுவனமான டைகர் ஏர்வேய்ஸ்அண்டை நாடுகளின் மற்ற மலிவு விமான நிறுவனங்களோடு கடும் சவாலையும் வர்த்தகப் போட்டிகளையும் எதிர்நோக்கி வருகிறது.
குறிப்பாக, ஏர்ஆசியா, ஏர் மலிண்டோ போன்ற நிறுவனங்களிடமிருந்து அது கடும் போட்டியை எதிர்நோக்கி வருகிறது.