Home உலகம் அமெரிக்காவில் 75 விஞ்ஞானிகளுக்கு ஆந்த்ராக்ஸ்?

அமெரிக்காவில் 75 விஞ்ஞானிகளுக்கு ஆந்த்ராக்ஸ்?

535
0
SHARE
Ad

anthraxவாஷிங்டன் ஜூன் 21 – உயிர்க்கொல்லி நோயான ஆந்த்ராக்ஸ், அமெரிக்காவின் அட்லாண்டா மாநிலத்தில் உள்ள அரசு ஆய்வகங்களில் பணிபுரியும் விஞ்ஞானிகளில் 75 பேர் பரவியிருக்கலாம் என கூறப்படுகின்றது.

பேசில்லஸ் ஆந்த்ராசிஸ் என்ற பாக்டீரியாவின் தாக்கத்தினால் ஏற்படும் ஒரு தொற்று நோயான ஆந்த்ராக்ஸ் விலங்குகள் மூலம் மக்களுக்கு பரவும் தன்மை கொண்டது. இந்த வகை பாக்டீரியாக்களை அமெரிக்க விஞ்ஞானிகள் தகுந்த பாதுகாப்பின்றி கையாண்டதால் அவர்களுக்கு பரவி இருக்கலாம் என அமெரிக்க அரசு தெரிவித்துள்ளது.

உயர்மட்ட பாதுகாப்பு கொண்ட ஒரு ஆய்வகத்தில் பணிபுரியும் விஞ்ஞானிகள் தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் இருந்துள்ளதால் இந்த சம்பவம் நடந்துள்ளதாக அரசு தகவல்கள் தெரிவிக்கின்றன.

#TamilSchoolmychoice

ஆய்வுக்குப் பின்னர் இந்த பாக்டீரியாக்களை அந்த விஞ்ஞானிகள் குறைந்தபட்ச பாதுகாப்பு கொண்ட ஆய்வகங்களுக்கு மாற்றியதாகவும் கூறப்படுகின்றது.

இந்த நிகழ்வு கடந்த 13-ம் தேதி அன்று கண்டுபிடிக்கப்பட்டதாகவும், உடனடியாக இதில் பணிபுரிந்துவரும் அனைவரையும் தொடர்பு கொள்ளத் தொடங்கியதாகவும் சிடிசி சுற்றுச்சூழல் சுகாதார மற்றும் பாதுகாப்பு அலுவலகத்தின் இயக்குனர் டாக்டர் பால் மீசன் தெரிவித்தார்.