Home கலை உலகம் என்னை மதிப்பவருக்கே என்னைத் தருவேன்! – நயன்தாரா

என்னை மதிப்பவருக்கே என்னைத் தருவேன்! – நயன்தாரா

622
0
SHARE
Ad

nayantara,சென்னை, ஜூலை 1 – என்னை யார் மதித்து நடத்துகிறார்களோ, அப்படி ஒருவருக்கே என் வாழ்க்கையில் இடமளிப்பேன் என்று நடிகை நயன்தாரா தெரிவித்தார். தமிழ், தெலுங்கில் முன்னனி கதாநாயகியாக உள்ள நயன்தாரா, அடுத்து ஒரு பேய்ப்படத்தில் நடிக்கிறார்.

இந்தப் படத்துக்கு “நைட் ஷோ” என்று தலைப்பிட்டுள்ளனர். சமீபத்தில் நயன்தாரா ஒரு பத்திரிகைக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியதாவது,

“எனக்கு தமிழில் ரஜினியையும், மலையாளத்தில் மோகன்லாலையும், தெலுங்கில் நடிகர் வெங்கடேஷையும் ரொம்பப் பிடிக்கும்.சினிமாவுக்கு வந்த புதிதில் என்னை ‘கவர்ச்சி’ நடிகையாகத்தான் பார்த்தார்கள். ரஜினியுடன் சந்திரமுகியில் நடித்த பிறகு அந்த பெயர் மாறியது.

#TamilSchoolmychoice

nayantaraநடிப்பு திறமையை வெளிப்படுத்தும் படமாக அது அமைந்தது. தெலுங்கில் லட்சுமி, ஸ்ரீராமராஜ்ஜியம் படங்கள் எனக்கு திருப்பு முனையை ஏற்படுத்தின. மேலும், எனக்கு கணவராக வருபவர் என்னை கவுரவமாக நடத்த வேண்டும். எனது குடும்பத்தினருக்கு முக்கியத்துவம் கொடுப்பவராக இருக்க வேண்டும்.

என்னை அன்பாக பார்த்துக் கொள்பவராகவும் எனக்கு மதிப்புக் கொடுப்பவராகவும் இருக்க வேண்டும். வாழ்க்கையில் எவ்வளவு கஷ்டம் வந்தாலும் தன்னம்பிக்கையை மட்டும் இழக்கக் கூடாது. தோல்விகள் எவ்வளவு வந்தாலும் அதற்காக கவலைப்படக் கூடாது.

எத்தனை கஷ்டம் வந்தாலும் விழுந்து எழும் கடல் அலை மாதிரி எழ வேண்டும். தெரியாத விஷயங்கள் பற்றிப் பேசக் கூடாது என நயன்தாரா கூறியுள்ளார்.

இந்த குணங்கள் யாருக்கு இருக்கிறதோ அவர்கள் சினிமா துறைக்கு செல்லுங்க! நயன்தாராவ வெல்லுங்க! …