Home நாடு “இந்து சமுதாயத்தின் வளர்ச்சிக்கு இணைந்தே பணியாற்றுவோம்” – இராமசாமிக்கு மா அழைப்பு

“இந்து சமுதாயத்தின் வளர்ச்சிக்கு இணைந்தே பணியாற்றுவோம்” – இராமசாமிக்கு மா அழைப்பு

582
0
SHARE
Ad

big_thumb_d8d5புத்ரா ஜெயா, ஜூலை 7 – தேசிய இந்து அறவாரியத்தின் தலைவராக நியமிக்கப்பட்டது குறித்து பினாங்கு துணை முதல்வர் (2) பி.இராமசாமி தம்மை விமர்சித்தாலும், தான் அவருடன் இணைந்து பணியாற்றி இந்து சமுயாதத்திற்கு நன்மை செய்ய விரும்புவதாக டத்தோ மா சியூ கியோங் கூறியுள்ளார்.

இராமசாமியின் விமர்சனத்தை பெரிது படுத்தி இதை அரசியலாக்க வேண்டாம் என்ற காரணத்தினால் தான் இந்த விவகாரத்தில் அமைதி காப்பதாகவும் மா தெரிவித்துள்ளார்.

இது குறித்து மா இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “சட்டம் சொல்வது என்னவென்றால், நாடாளுமன்றத்தில் அறவாரியத்தின் கணக்குகள் மற்றும் ஆண்டறிக்கையை அமைச்சர் சமர்ப்பிக்க வேண்டும். அதற்கு இந்த குழுவிற்கு ஒரு இந்து தலைவராக இருந்து ஒவ்வொரு செயல்பாடுகளையும் கவனித்துக் கொள்ள வேண்டும். ஒரு அமைச்சராக நான் இந்து விவகாரங்கள் சுமூகமான முறையில் நடப்பதை உறுதி செய்வேன். எனவே என்னுடைய நியமனம் நல்லது என்று தான் நான் நினைக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

மேலும், “தமிழ்ப் பள்ளிகளில் தலைமையாசிரியர் இந்தியராக இருக்கிறார். ஆனால் அமைச்சர் இந்தியராக இருக்க வேண்டிய அவசியம் இருக்கிறதா?” என்றும் மா கேள்வி எழுப்பியுள்ளார்.

“நான் இந்த பதவிக்கு நியமனம் செய்யப்பட்டு சில நாட்களே ஆகியுள்ளது. வாய்ப்பு கொடுங்கள். நாம் கலந்தாலோசித்து சமுதாயத்திற்கு உதவும் நல்ல வழிகளை யோசிப்போம்” என்று மா தெரிவித்துள்ளார்.