Home கலை உலகம் ஹன்சிகாவின் ‘ஆம்பள’ விஷால்!

ஹன்சிகாவின் ‘ஆம்பள’ விஷால்!

676
0
SHARE
Ad

hansikaசென்னை, ஜூலை 14 – சுந்தர் சி. இயக்கத்தில் விஷால் நடிக்கும் படத்திற்கு “ஆம்பள” என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. விஷால் தற்போது ஹரியின் இயக்கத்தில் பூஜை படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் மூலம் ஸ்ருதி ஹாஸன் முதல்முறையாக அவருடன் ஜோடி சேர்ந்துள்ளார்.

படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்நிலையில் விஷால் சுந்தர் சி.யின் இயக்கத்தில் மீண்டும் நடிக்கத் துவங்கியுள்ளார். இந்த படத்தில் விஷாலுக்கு ஜோடியாக ஹன்சிகா நடிக்கிறார்.

சுந்தர் சி விஷால், ஹன்சிகாவை வைத்து படத்தை துவங்கிவிட்டார். பரபரவென படப்பிடிப்பை நடத்தி படத்தை வெளியிடுவதற்கு பெயர்போனவர் சுந்தர் சி.

#TamilSchoolmychoice

aambala_1சுந்தர் சி. தனக்கே உரிய பாணியில் இந்த படத்தை முழு நீள காமெடி படமாக எடுக்கிறார். இந்த படத்திற்கு “ஆம்பள” என்று பெயர் வைத்துள்ளார்களாம்.

எதிர்நீச்சல் படத்தில் காமெடியனாக வந்த சதீஷ் தான் “ஆம்பள” படத்தில் காமெடி செய்து நம்மை சிரிக்க வைக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

madha-gaja-raja-movie-stillசுந்தர் சி. இயக்கத்தில் விஷால் நடித்த “மதஜகஜ” ராஜா படம் இன்னும் வெளியாகவில்லை. இந்நிலையில் மீண்டும் சுந்தரும், விஷாலும் சேர்ந்து பணியாற்றுகிறார்கள்.

“தீயா வேலை செய்யணும் குமாரு”, “அரண்மனை” படங்களை அடுத்து “ஆம்பள” படத்தின் மூலம் மூன்றாவது முறையாக சுந்தர் சி. இயக்கத்தில் நடிக்கிறார் ஹன்சிகா.