Home கலை உலகம் லிங்காவில் “குரு சிஷ்யன்” ரஜினி பிரபு!

லிங்காவில் “குரு சிஷ்யன்” ரஜினி பிரபு!

1104
0
SHARE
Ad

superstar-Rajinikanthசென்னை, கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் லிங்கா படத்தில் பிரபுவும் நடிக்கிறார் என்பது தான் புதியத் தகவல். கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினி இரட்டை வேடங்களில் நடித்து வரும் படம் லிங்கா.

ரஜினிக்கு ஜோடியாக சோனாக்ஷி சின்ஹா, அனுஷ்கா ஆகியோர் நடித்து வருகிறார்கள். மைசூரில் துவங்கிய படப்பிடிப்பு ஹைதராபாத்துக்கு சென்றது. மைசூரில் பூஜை போட்டு படத்தை துவங்கினர்.

rajini,முதல் மற்றும் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு முடிந்துள்ளது. இந்நிலையில் படத்தில் ஒருவர் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளார். அந்த புதிய வரவு வேறு யாரும் அல்ல நம்ம பிரபு தான். லிங்கா படத்தில் நடிக்குமாறு ரவிக்குமார் பிரபுவை கேட்க அவரும் உடனே ஒப்புக் கொண்டிருக்கிறார்.

#TamilSchoolmychoice

ரஜினியும், பிரபுவும் சேர்ந்து ஏற்கனவே குரு சிஷ்யன், தர்மத்தின் தலைவன், சந்திரமுகி ஆகிய படங்களில் நடித்துள்ளனர். இந்த வெற்றிக் கூட்டணி லிங்காவிலும் தொடர்கிறது.

ஹைதராபாத்தில் நடந்த படப்பிடிப்பு முடிந்துவிட்டதால் சோனாக்ஷி சின்ஹா, அர்ஜுன் கபூருடன் நடிக்கும் தேவர் படப்பிடிப்பில் கலந்து கொள்ள மும்பை சென்றுவிட்டார்.

rajini-ajith-attend-sivaji-prabhu“லிங்கா” படத்தில் விஜயகுமார், ராதாரவி, சந்தானம், ஆர். சுந்தர்ராஜன், மனோபாலா, கருணாகரன், ஜெகபதிபாபு, தேவ்கில் என்று ஒரு பெரிய நட்சத்திர பட்டாளமே உள்ளது. இந்த நட்சத்திர பட்டாளத்தில் ரஜினியின் சிஷ்யரான இளைய திலகம் பிரபு சேர்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது.