Home வணிகம்/தொழில் நுட்பம் சிங்கப்பூர்-கோலாலம்பூர் விரைவு ரயில் சேவையினால் இருநாட்டு வர்த்தகம் பெருகும் – நிலங்களின் மதிப்பு உயரும்!

சிங்கப்பூர்-கோலாலம்பூர் விரைவு ரயில் சேவையினால் இருநாட்டு வர்த்தகம் பெருகும் – நிலங்களின் மதிப்பு உயரும்!

866
0
SHARE
Ad

high-speed-train-sliderகோலாலம்பூர், பிப்ரவரி 20 –  சிங்கப்பூருக்கும் கோலாலம்பூருக்கும் இடையில் தொடங்கப்படவிருக்கும் விரைவு ரயில் சேவையினால் இருநாடுகளுக்கிடையில் உள்ள வர்த்தக, பொருளாதார உறவுகள் பெருமளவில் பெருகும் என்பதுடன் இருநாடுகளுக்கிடையில் தற்போது சீராக இருந்து வரும் அரசாங்க உறவுகளும் வலுவடையும்.

ரயில் பாதை அமையவிருக்கும் பகுதிகளில் உள்ள தரிசு நிலங்கள், காலி நிலங்கள் வேகமாக மேம்படுத்தப்படும் வாய்ப்புக்கள் அதிகம் உள்ளதனால், ரயில் பாதையை ஒட்டிய நிலங்களின் மதிப்பும் பன்மடங்காக உயரும்.

அதே வேளையில் இருநாடுகளுக்கிடையிலான சுற்றுலா மேலும் அதிகமாக மேம்பாடு காணும். இரு நாடுகளுக்கும் வருகையளிக்கும் சுற்றுலாப் பயணிகள் ரயில் சேவையை பயன்படுத்தி தங்களின் சுற்றுலாவைத் தொடர்வார்கள் என்பதால் சுற்றுலாத் துறையும் நன்கு வளர்ச்சியடையும்.

#TamilSchoolmychoice

குறிப்பாக சிங்கப்பூருக்கு அதிகமாக வரும் சுற்றுப் பயணிகள் இந்த ரயில் சேவையை பயன்படுத்தி மலேசியாவுக்கும் தங்கள் வருகையை நீட்டிக்கும் சூழ்நிலை உருவாகும்.

கடந்த 15 ஆண்டுகளாக திட்ட அளவிலேயே இருந்து வந்த இந்த விரைவு ரயில் சேவை தற்போது அமலாக்கம் காண்பதால் இரண்டு நாடுகளுமே பொருளாதார ரீதியாக பலவகையான நன்மைகளைப் பெற முடியும்.