கீவ் (உக்ரேன்), ஜூலை 21 – உக்ரேன் நாட்டின் தலைநகர் கீவ் நகரில் உள்ள மலேசியத் தூதரகத்திற்கு வருகை தந்த உக்ரேன் அதிபர் பெட்ரோ பொரோஷெங்கோ, எம்எச் 17 விமானப் பேரிடரில் உயிரிழந்தவர்களுக்கான அனுதாப புத்தகத்தில் கையெழுத்திட்டு தனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொண்டார்.
அவருக்கு அருகில் இடப்புறம் உக்ரேன் நாட்டுக்கான மலேசியத் தூதர் சுவா தியோங் பான் நிற்கின்றார். உடனிருப்பவர்கள், மலேசிய வெளியுறவு அமைச்சர் அனிஃபா அமான், மற்றும் போக்குவரத்து அமைச்சர் லியோவ் தியோங் லாய் (வலதுகோடி) ஆகியோர்.
பின்னர், கீவ் நகரிலுள்ள நெதர்லாந்து தூதரகத்திற்கும் வருகை தந்த உக்ரேன் அதிபர் அங்கு வெளியே குவிக்கப்பட்டிருந்த மலர் வளையங்களின் குவியல் மீது மலர்களை வைத்து உயிரிழந்த பயணிகளுக்காக அஞ்சலி செலுத்தினார். அவருடன் உக்ரேன் நாட்டின் நெதர்லாந்து தூதரும் அஞ்சலி செலுத்தினார்.
படங்கள்: EPA