Home இந்தியா வெள்ளத்தில் தத்தளிக்கிறது பீகார்! ஒரு லட்சம் பேர் வெளியேற்றம்!

வெள்ளத்தில் தத்தளிக்கிறது பீகார்! ஒரு லட்சம் பேர் வெளியேற்றம்!

460
0
SHARE
Ad

bhihar,பாட்னா, ஆகஸ்ட் 4 – பூடானில் இருந்து, நேபாளம் வழியாக இந்தியாவின் பீகார் மாநிலத்துக்கு பாயும்  கோசி நதியில் ஏற்பட்ட வெள்ளத்தால், பீகாரின் பல மாவட்டங்கள் வெள்ளத்தில்  தத்தளிக்கின்றன.

பாதுகாப்பு நடவடிக்கையாக ஒரு லட்சம் பேர் வெளியேற்றப்பட்டனர்.  இதையடுத்து கடந்த 2008ல் கோசி நதியில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் 434 பேர்  உயிரிழந்தது போன்ற விபரீதம் தவிர்க்கப்பட்டுள்ளது.

biharநேபாளத்தின் சிந்துபால்சோக்  மாவட்டத்தில் நேற்று முன்தினம் மிகப் பெரிய நிலச்சரிவு ஏற்பட்டது. இது கோசி நதியின்  பாதையை அடைத்தது. சில இடங்களில் தடுப்புகள் அகற்றப்பட்டு, கோசி நதியில்  வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

#TamilSchoolmychoice

இதனால் பீகாருக்கு வரும் கோசி நதியில் அதிக  அளவு வெள்ளப் பெருக்கு ஏற்படும் என எச்சரிக்கப்பட்டது. மத்திய நதிநீர் கமிஷனின்  கணிப்புபடி விநாடிக்கு 14 லட்சம் கன அடி வெள்ளம் வரும்.

bihaarஅதே நேரத்தில் நேபாளத்தில்  உள்ள இந்தியத் தூதரகம் 25 லட்சம் கன அடி தண்ணீர் வெளியேறும் என்று எச்சரித்துள் ளது. இதில் 40% வெள்ளம் பீகாருக்கு வரும். இதனால் பீகாரின் 8 மாவட்டங்களில் மிகப்  பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்.

நதியில் 33 அடி உயரத்துக்கு தண்ணீர் வரும் என்பதால்  பீகாரில் கோசி நதியை ஒட்டியுள்ள பகுதிகளில் இருந்து ஒரு லட்சம் பேர் பத்திரமாக  வெளியேற்றப்பட்டனர். அவர்கள் தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.

biharrஇதனிடையில் நேபாளத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில், அப்பகுதியில் இருந்த 200க்கும்  மேற்பட்டோரை காணவில்லை. இவர்கள் நிலச்சரிவுக்குள் சிக்கி உயிரிழந்திருக்கலாம்  என்று தெரிகிறது.