Home இந்தியா நலமுடன் வீடு திரும்பினார் ராஜ்நாத் சிங்!

நலமுடன் வீடு திரும்பினார் ராஜ்நாத் சிங்!

602
0
SHARE
Ad

Rajnath_singhடெல்லி, ஆகஸ்ட் 14 – மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் டெல்லி ஏய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியுள்ளார்.  மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்று இரவு 8:30 மணி அளவில் ‘திடீர்’ உடல்நலக்குறைவால் ஏய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு அடிவயிற்றில் வலி ஏற்பட்டதால் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. ராஜ்நாத் சிங்குக்கு சில பரிசோதனைகள் செய்யப்பட்டன. இதனையடுத்து அவர் இன்று மதியம் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார்.

முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய டெல்லி பாரதீய ஜனதா கட்சி தலைவர் விஜய் கெயல்; ராஜ்நாத் சிங் உடல் நலத்துடன் உள்ளார். ஆனால் நாடாளுமன்றத்திற்கு வரமாட்டார் என்று கூறினார்.