பாங்காக், ஆகஸ்ட் 23 – இராணுவப் புரட்சியில் சிக்கியிருக்கும் தாய்லாந்து நாட்டின் புதிய பிரதமராக, அந்த நாட்டின் இராணுவப் படைகளின் தலைவரான ஜெனரல் பிரயுத் சான்-ஓச்சா நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜெனரல் பிரயுத் சான்-ஓச்சா
தாய்லாந்து நாட்டின் தேசிய சட்டமன்றம் ஜெனரல் பிரயுத்துவை தாய்லாந்து நாட்டின் 29வது பிரதமராக ஏக மனதாக தேர்ந்தெடுத்தது.
கடந்த மே மாதம் 22ஆம் தேதி, புரட்சி மூலம் நாட்டின் அதிகாரத்தைக் கைப்பற்றிய தாய்லாந்து இராணுவம் தொடர்ந்து உள்நாட்டு மக்களிடமிருந்தும் அரசியல் கட்சிகளிடமிருந்தும் எதிர்ப்புப் போராட்டங்களையும், ஆர்ப்பாட்டங்களையும் சந்தித்து வருகின்றது.
இந்நிலையில், மீண்டும் ஜனநாயகத்திற்கு நாட்டைத் திருப்புவதற்கு சில சீர்திருத்தங்களை மேற்கொள்ளவிருக்கும் தாய்லாந்து இராணுவம், 2015ஆம் ஆண்டின் இறுதியில் ஜனநாயக ரீதியான தேர்தலை நடத்த உத்தேசித்துள்ளது.