Home கலை உலகம் ஜோசியம் பார்க்க நல்ல ஊரைத் தேடும் ஹன்சிகா!

ஜோசியம் பார்க்க நல்ல ஊரைத் தேடும் ஹன்சிகா!

1000
0
SHARE
Ad

hansiha2சென்னை, ஆகஸ்ட் 29 – ஜோதிடத்தில் அதீத நம்பிக்கை கொண்ட நடிகை ஹன்சிகா, தன் எதிர்காலத்தை இன்னும் ஆழமாகத் தெரிந்து கொள்ள நாடி ஜோசியத்தை நாட முடிவு செய்துள்ளார்.

இதற்காக அவர் தமிழகத்தில் நாடி ஜோதிடம் பிரபலமாக உள்ள காஞ்சிபுரம் மற்றும் வைத்தீஸ்வரன் கோயில் போன்ற ஊர்களுக்குச் செல்ல முடிவு செய்துள்ளாராம்.

தமிழ், தெலுங்கு பட உலகில் முன்னணி நடிகையாக உள்ள ஹன்சிகா, கோடிக்கு மேல் சம்பளம் பெறுகிறார். இளம் நடிகர்கள், முன்னணி நடிகர்கள் என்ற பேதம் பார்ப்பதில்லை. ஆதனால், தான் இவ்வளவு பெரிய நிலைமைக்கு வருவோம் என்பதை ஏற்கெனவே தெரிந்து வைத்திருந்தாராம் ஹன்சிகா.

#TamilSchoolmychoice

எப்படி? எல்லாம் ஜோதிடம்தான். சின்ன வயதில் ஒரு ஜோசியக்காரர் அவரது ஜாதகத்தைப் பார்த்து பெரிய நட்சத்திரமாக அவர் ஜொலிப்பார் என்று கூறியிருந்தாராம். அது அப்படியே நடந்துவிட்டது என்று கூறினார் ஹன்சிகா.

Hanshika2இதுகுறித்து அவர் கூறுகையில், “சிறு வயதில் நான் ஜோதிடம் பார்த்தேன். எதிர்காலம் பிரகாசமாக இருக்கிறது என்றும் மக்கள் மத்தியில் பிரபலமாக இருப்பேன் என்றும் ஜோதிடர் கூறினார். அது பலித்து விட்டது.

இப்போது பிரபல நடிகையாகி விட்டேன். நாடி ஜோதிடம் பற்றி கேள்விப்பட்டு இருக்கிறேன். கடந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் அனைத்தையும் அதில்கணித்து கூறுகிறார்களாம். எனக்கும் நாடி ஜோதிடம் பார்க்க வேண்டும் என்று ஆசையாக உள்ளது.

தமிழகத்தில் நாடி ஜோதிடர்கள் உள்ள ஊர்கள் பற்றிச் சொன்னார்கள். விரைவில் நாடி ஜோதிடரைச் சந்திப்பேன்,” என்றார் ஹன்சிகா.