Home வாழ் நலம் மாலைக்கண் நோயை குணமாக்கும் செவ்வாழைப்பழம்!

மாலைக்கண் நோயை குணமாக்கும் செவ்வாழைப்பழம்!

4770
0
SHARE
Ad

banane-rosiiசெப்டம்பர் 2 – எளிமையும், எண்ணற்ற சத்துக்களும் கொண்டது வாழைப்பழம். வாழைப்பழத்தில் பல வகை உண்டு. சிலவற்றில் உயிர்ச்சத்தும்,  சிலவற்றில் சுண்ணாம்பு சத்தும், இரும்புச் சத்தும் காணப்படுகின்றன.

பலரும் அரிய அளவிலேயே உட்கொள்ளும் செவ்வாழைப்பழம் பல மருத்துவ குணங்களை  கொண்டது. செவ்வாழையின் தாயகம் அமெரிக்க நாடுகளான கோஸ்டரீகா மற்றும் கியூபா என கூறப்படுகிறது.

இதில் உள்ள பீட்டா கரோட்டீன் கண்நோய்களை குணமாக்கும். செவ்வாழையில் உயர்தர பொட்டாசியம் உள்ளது. இது சிறுநீரகத்தில் கல் ஏற்படுவதை தடுக்கிறது. இதில் வைட்டமின் ‘சி’ சத்து அதிகம் உள்ளது.

#TamilSchoolmychoice

red-bananaசெவ்வாழையில் ஆண்டி ஆக்ஸிடென்ட் காணப்படுகிறது. இதில் 50 சதவீதம் நார்ச்சத்து காணப்படுகிறது. மாலைக்கண் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இரவு ஆதாரத்துக்கு பிறகு தொடர்ந்து 40 நாட்கள் செவ்வாழை சாப்பிட்டு வந்தால் மாலைக்கண் நோய் குணமாகும்.

பல்வலி, பல்லசைவு போன்ற பலவகையான பல்வியாதிகளையும் செவ்வாழைப்பழம் குணமாக்கும்.பல் தொடர்புடைய நோய்கள் ஏற்பட்டால் தொடர்ந்து 21 நாட்கள் செவ்வாழை சாப்பிட்டு வந்தால் குணமாக்கும்.

சொறி, சிரங்கு, தோலில் வெடிப்பு போன்ற சரும வியாதிகளுக்கு செவ்வாழை சிறந்த நிவாரணம் தரும். சிரங்குக்கு மருந்து போடாவிட்டாலும் செவ்வாழை பழத்தை தொடர்ந்து 7 நாட்கள் சாப்பிட்டு வர சரும நோய் குணமாகும்.

நரம்புத் தளர்ச்சி ஏற்பட்டால் உடலில் பலம் குறையும். ஆண்மை குறைபாடு ஏற்படும். எனவே நரம்பு தளர்ச்சியால் பாதிக்கப்பட்டவர்கள் தினசரி இரவு செவ்வாழைப்பழம் சாப்பிடவேண்டும். தொடர்ந்து 48 நாட்கள் செவ்வாழை சாப்பிட்டால் நரம்புகள் பலம் பெறும். ஆண்மை தன்மை சீரடையும்.

red bananaமேலும் தினமும் இரவு உணவிற்கு பிறகு ஒரு பழம் வீதம் சாப்பிட்டு வந்தால் நல்ல ஜீரணசக்தி உண்டாகும். மேலும் செவ்வாழை பழம் கல்லீரல் வீக்கம், சிறுநீர் கோளாறை சீராக்கும் சக்தி கொண்டது.

எந்த வயதினராக இருந்தாலும் கண் பார்வை குறைய ஆரம்பித்தவுடன் அவர்களுக்கு தினசரி உணவில் செவ்வாழைப்பழம் வேளைக்கு ஒன்று வீதம் 21 நாட்களுக்கு கொடுத்து வந்தால் கண் பார்வை கொஞ்சமாக தெளிவடையும்.