Home கலை உலகம் “சைமா” – விழாவில் குஷ்பு (பிரத்தியேகப் படங்கள் தொகுப்பு – 7)

“சைமா” – விழாவில் குஷ்பு (பிரத்தியேகப் படங்கள் தொகுப்பு – 7)

1031
0
SHARE
Ad

கோலாலம்பூர், செப்டம்பர் 13 – தமிழகத்தின் பிரபல நடிகையும், சர்ச்சைகளின் சளைக்காத கதாநாயகியுமான குஷ்பு தனது இரண்டு புதல்விகளுடன் கோலாலம்பூரில் நடைபெறும் சைமா எனப்படும் – தென்னிந்திய திரைப்பட அனைத்துலக விருதளிப்பு விழாவில் கலந்து கொண்டார்.

அவரது பிரத்தியேகப் படங்களை இங்கே காணலாம்:-

Kushboo

#TamilSchoolmychoice

வடநாட்டு வார்ப்பு என்றாலும், இந்திப் படங்களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகியவர் என்றாலும், பின்னாளில் தமிழ் நாட்டு இரசிகர்களின் இதயங்களைக் கொள்ளை கொண்டு, பல தமிழ்ப்படங்களில் நடித்து தமிழ் நாட்டு மருமகளாகவே மாறிவிட்ட நடிகை குஷ்பு…

Kushboo

நேற்றைய முதல் நாள் சைமா விழாவில் கலந்து கொள்ள வந்தபோது தொலைக்காட்சி நிருபருக்கு பேட்டியளிக்கும் குஷ்பு…

Kushboo

ஜெயலலிதாவுக்குப் பின் அரசியலில் ஒரு கலக்கு கலக்கியவர் குஷ்பு. இருப்பினும் திமுகவில் சேர்ந்த அவருக்கு அங்கு ஏற்கனவே மையம் கொண்டிருந்த குடும்ப அரசியல் புயலினால், ஏற்பட்ட கசப்புணர்வுகள் அவரைத் தற்போது அரசியலில் இருந்து தற்காலிகமாக ஒதுக்கி வைத்துள்ளது.

Kushboo and Dance Master Brintha

குஷ்புவுடன் அவருடைய நெருங்கிய தோழியான நடன இயக்குநர் பிருந்தா…

Kushboo

படங்களில் முன்னணி கதாநாயகியாக நடித்த காலத்தில் பிரபல இயக்குநர் சுந்தர் சி.-யை கரம் பிடித்தவர் – தற்போது இரண்டு பெண் குழந்தைகளுக்குத் தாய். ஆனால் அவருக்கு ஒரு காலத்தில் கோயில் கட்டி மகிழ்ந்த தமிழ் நாட்டு இரசிகர்களிடத்தில் இன்னும் குஷ்புவுக்கு இருக்கும் கவர்ச்சியும், பிரபல்யமும் சற்றும் குறைந்ததாகத் தெரியவில்லை…

செய்திகள், பிரத்தியேகப் படங்கள் – பீனிக்ஸ்தாசன்

(முக்கிய குறிப்பு: இந்த செல்லியல் செய்தியில் வெளியிடப்பட்டுள்ள படங்கள் யாவும் செல்லியலின் சிறப்பு பிரத்தியேகப் படங்கள் ஆகும். இவற்றை எடுத்தாள்வதற்கும், மறு பிரசுரம் செய்வதற்கும் செல்லியல் நிர்வாகத்தின் முன் அனுமதியைப் பெறவேண்டும்)