Home நாடு எம்எச் 17 : பேரிடர் நிகழ்ந்த பகுதியில் மீண்டும் நுழைய முயற்சி – ஹிஷாமுடின் தகவல்

எம்எச் 17 : பேரிடர் நிகழ்ந்த பகுதியில் மீண்டும் நுழைய முயற்சி – ஹிஷாமுடின் தகவல்

624
0
SHARE
Ad

Hishamuddin Hussein Onn கோலாலம்பூர், செப்டம்பர் 19 – எம்எச் 17 விமானப் பேரிடர் நிகழ்ந்த பகுதிகளில் மீண்டும் நுழைவது தொடர்பில் ஆஸ்திரேலியா மற்றும் நெதர்லாந்துடன் மலேசியா அணுக்கமாகச்
செயல்படும் என டத்தோஸ்ரீ ஹிஷாமுடின் தெரிவித்தார்.

குளிர்காலம் தொடங்குவதற்குள் பேரிடர் தொடர்பாக கிடைக்கும் அனைத்துவித ஆதாரங்களையும் திரட்டவும், விபத்தில் பலியானவர்களின் எஞ்சிய நல்லுடல்களை மீட்கவும் திட்டமிட்டிருப்பதாக அவர் கூறினார்.

இதற்காக அனைத்துலக கூட்டு நடவடிக்கைக் குழு மற்றும் ஐரோப்பிய பாதுகாப்பு மற்றும் ஒத்துழைப்பு நிறுவனத்துடன் அணுக்கமாகச் செயல்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.

#TamilSchoolmychoice

சம்பவ இடத்தில் ஆய்வுப் பணியை மேற்கொண்டிருப்பதுடன், இந்நடவடிக்கையில் வேறு எந்தெந்த தரப்பை ஈடுபடுத்துவது என்பது குறித்து ஐரோப்பிய பாதுகாப்பு மற்றும் ஒத்துழைப்பு நிறுவனத்துடன் ஆராய்ந்து வருவதாக தற்காப்புத்துறை அமைச்சரான ஹிஷாமுடின் மேலும் தெரிவித்தார்.

எம்எச் 370 தேடுதல் பணியும் தொடர்கிறது

இதற்கிடையில் எம்எச் 370 தொடர்பான தேடுதல் நடவடிக்கையில் பெட்ரோனாஸ் உதவியுடன் ஜிஓ பீனிக்ஸ் எனும் கப்பல் ஈடுபடுத்தப்பட இருப்பதாக குறிப்பிட்ட அவர்,
தேடுதல் நடவடிக்கை தொடங்கும் முன்னர் பெட்ரோனாஸ் தலைமைச் செயல்முறை
அதிகாரியுடன் தாம் பெர்த் நகருக்குச் செல்லவிருப்பதாகக் கூறினார்.

“விமானத்தை தேடும் பணியில் சீன கப்பல்கள் இரண்டும் ஈடுபடுத்தப்பட உள்ளன.
இவை தேடுதல் நடவடிக்கையின் தொடக்கத்திலேயே இப்பணியில் ஈடுபட்ட கப்பல்கள்.
இது தொடர்பாக அடுத்த வாரம் சீன அரசுடன் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது,”
என்றும் ஹிஷாமுடின் தெரிவித்தார்.