Home கலை உலகம் நடிகர் ராகவா லாரன்ஸ் மீது மோசடி வழக்கு!

நடிகர் ராகவா லாரன்ஸ் மீது மோசடி வழக்கு!

631
0
SHARE
Ad

ragava_laweranceசென்னை, செப்டம்பர் 27 – பிரபல நடன இயக்குநர், நடிகர் ராகவா லாரன்ஸ், நடனம் மட்டுமில்லாமல் தன்னுடைய கற்பனை திறனால் சில படங்களும் இயக்கினார். தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கிலும் படங்கள் இயக்கியுள்ளார்.

இதில் 2 வருடங்களுக்கு முன்பு இவர் இயக்கத்தில் வெளிவந்த ‘ரபேல்’ என்ற தெலுங்குப் படம் அங்கு படு தோல்வியை சந்தித்தது. இப்படத்தை எடுக்க முதலில் தயாரிப்பாளரான பகவான், புள்ள ராவும்,  லாரன்ஸுடம் 23 கோடியில் படத்தை முடிக்க ஒப்பந்தம் செய்யபட்டது.

ஆனால் கடைசியில் 28 கோடியில் படத்தை முடித்து தந்தார் லாரன்ஸ், படம் தோல்வியை தழுவிய நிலையில் மீதி உள்ள 5 கோடி திரும்ப தருமாறு கேட்டனர் தயாரிப்பாளரான பகவானும், புள்ள ராவும்.

#TamilSchoolmychoice

ஆனால், லாரன்சிடம் இருந்து எந்த ஒரு பதிலும் வராததால் தற்போது நீதிமன்றத்தை  நாடியுள்ளனர் தயாரிப்பு நிறுவனம். நீதிமன்றத்தில் லாரன்ஸ் மீது மோசடி வழக்கில் குற்ற பத்திரிகை பதிவு செய்யப்பட்டு உள்ளது.