Home கலை உலகம் அர்னால்டு-ரஜினிக்கு நன்றி தெரிவித்த ஷங்கர்!

அர்னால்டு-ரஜினிக்கு நன்றி தெரிவித்த ஷங்கர்!

584
0
SHARE
Ad

rajini-director-shanker-arnoldசென்னை, செப்டம்பர் 27 – ஷங்கர் தயாரிப்பில் தற்போது பிரம்மாண்டமாக உருவாகியிருக்கும் படம் ‘ஐ’. இதில் விக்ரம்-எமி ஜாக்சன் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கும் இப்படத்திற்கு பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவை செய்திருக்கிறார்.

இப்படத்தை ஆஸ்கார் ரவிச்சந்திரன் அதிக பொருட்செலவில் தயாரித்து வருகிறார். இரண்டரை வருடத்திற்கு முன் தொடங்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு இரு தினங்களுக்கு முன்பு முடிவடைந்துள்ளது.

சமீபத்தில் ஐ படத்தின் பாடல்கள் மற்றும் முன்னோட்டம் பிரம்மாண்டமாக விழா நடத்தி வெளியிடப்பட்டது. இதில் சிறப்பு விருந்தினராக அர்னால்டு பங்கேற்றார். மேலும் இந்த விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினி, புனித் ஆகியோர் கலந்துகொண்டனர்.

#TamilSchoolmychoice

இவ்விழாவில் ஷங்கரின் அடுத்த படத்தில் நடிக்க விரும்புவதாக அர்னால்டு கூறியிருந்தார். இவ்விழாவில் அர்னால்டு கலந்து கொண்டதற்கும், சிறப்பாக பேசியதற்கும் ஷங்கர் நன்றி தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த முக்கியமான தருணங்களில் தன்னுடன் இருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கும் நன்றி தெரிவித்துள்ளார். இதுவரை ஐ முன்னோட்டத்தை (டிரைலரை) மட்டும் யூடியூபில் 60 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் பார்த்துள்ளனர்.