வாஷிங்டன், அக்டோபர் 2 – இந்தியாவில் மூன்று முக்கிய நகரங்களை, ’நவீன நகரங்களாக’ (Smart City) மாற்ற அமெரிக்கா முன்வந்துள்ளது. இந்தியாவில் ஆட்சிப் பொறுப்பேற்ற உடன், நரேந்திர மோடி அறிவித்த முக்கியத் திட்டங்களுள் நவீன நகரம் திட்டமும் ஒன்று.
இந்தியாவில் உள்ள 100 பேரு நகரங்களை, உலகத்தரத்துக்கு ஈடான நகரங்களாக மாற்றுவதே இந்த நவீன நகரம் திட்டத்தின் நோக்கமாகும். ஜப்பான் சுற்றுப் பயணத்தின் போது மோடி, கியோட்டோ எனும் ஜப்பானின் நவீன நகரத்தின்ன் திட்டங்கள் மற்றும் கட்டமைப்புகளை பற்றி தெரிந்து கொண்டார்.
அதே வகையில் இந்திய நகரங்களை வடிவமைக்க சுமார் 7 ஆயிரத்து 60 கோடி ரூபாயை இந்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. இந்தியப் பிரதமரின் இந்த திட்டத்தைப் பற்றி அறிந்த கொண்ட அமெரிக்க அரசு,
முதல்கட்டமாக உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள அலகாபாத், ஆக்ரா மற்றும் ஆந்திர மாநிலத்தில் உள்ள விசாகப்பட்டினம் ஆகிய 3 நகரங்களை நவீன நகரங்களாக மேம்படுத்த தேவையான உதவிகளைச் செய்ய முன்வந்துள்ளது.
மேலும், இந்தியாவின் 500 பெருநகரங்களில் குடிநீர் மற்றும் கழிவுநீர் அகற்றம் தொடர்பான பணிகளிலும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு வழங்கத் தயாராக இருப்பதாகவும் அறிவித்துள்ளது.