Home கலை உலகம் அனைத்துலக பன்முகத்தன்மை வாய்ந்தவர் விருதை பெற்ற ஷாருக்கான்!

அனைத்துலக பன்முகத்தன்மை வாய்ந்தவர் விருதை பெற்ற ஷாருக்கான்!

659
0
SHARE
Ad

shah-rukh-khanமும்பை, அக்டோபர் 8 – பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானுக்கு பிரிட்டன் அரசு உலகின் பன்முகத்தன்மை வாய்ந்தவர் விருதினை வழங்கி கவுரவித்துள்ளது.

லண்டனில் நடைபெற்ற விழாவில் அந்நாட்டு நாடாளுமன்ற சபாநாயகர் ஜான் பெர்கோவ், நாடாளுமன்ற உறுப்பினர் கீத் வேஸ் ஆகியோர் ஷாருக்கானுக்கு இவ்விருதை வழங்கினர்.

சினிமா துறையில் அவரது பங்களிப்பை கவுரவிக்கும் வகையில் இவ்விருது வழங்கப்பட்டுள்ளது. உலகில் சர்வதேச அளவில் முன்மாதிரியாக விளங்குபவர்கள் மற்றும் மதிக்கக்கூடியவர்களுக்கும் இவ்விருது வழங்கப்படுகிறது.

#TamilSchoolmychoice

இவ்விருதை பெற்ற ஷாருக்கான் தனது டிவிட்டரில், பிரிட்டன் நாடாளுமன்ற வளாகத்தில் இவ்விருதை பெறுவது எனக்கு பெருமையளிப்பதாகவும், மகிழ்ச்சிக்குரியதாகவும் உள்ளதாக கூறினார். அற்புதமான இந்த விழாவில் என்னை கவுரவித்ததற்கு மிக்க நன்றி என்று கூறியிருக்கிறார்.

Shahrukh Khan receives 'Knight of the Legion of Honour' in Mumbaiஷாருக்கானுக்கு பிரான்ஸ், மொராக்கோ நாட்டின் உயரிய விருதுகள் இதற்கு முன்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும் கடந்த சில தினங்களுக்கு முன் இண்டர்போலின் தூதுவராகவும் ஷாருக்கான் நியமிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே ஜாக்கிசான், அமிதாப்பச்சன், ஷேக் ஹசீனா மற்றும் ஐஸ்வர்யா ராய் ஆகியோருக்கு உலகின் பன்முகத்தன்மை வாய்ந்தவர் விருது வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.