Home நாடு புக்கிட் பிந்தாங் சம்பவம்: குண்டர் கும்பல் தகராறு காரணமாக இருக்கலாம் – காவல்துறை

புக்கிட் பிந்தாங் சம்பவம்: குண்டர் கும்பல் தகராறு காரணமாக இருக்கலாம் – காவல்துறை

540
0
SHARE
Ad

Bukit09101401eகோலாலம்பூர், அக்டோபர் 9 – புக்கிட் பிந்தாங்கிலுள்ள சன் வளாகத்தில் இன்று அதிகாலை நடைபெற்ற குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு குண்டர் கும்பல் தகராறு காரணமாக இருக்கலாம் என காவல்துறை சந்தேகப்படுகின்றது.

எனினும், இந்த சம்பவம் குறித்து காவல்துறை எல்லா கோணங்களிலும் விசாரணை நடத்தவுள்ளதாக உளவுத்துறை துணை ஆணையர் கைரி அகர்ஷா தெரிவித்துள்ளார்.

அந்த பகுதியிலுள்ள கட்டிடம் ஒன்றின் இரண்டாவது மாடியில் இருந்து மர்ம நபரால் வீசப்பட்ட கையெறி குண்டு தான் இந்த சம்பவத்திற்கு காரணம் என்பதால் ஆயுதம் கொண்டு கொலை முயற்சி என்ற குற்றத்தின் கீழ் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை தொடங்கியுள்ளது.

#TamilSchoolmychoice