Home நாடு புக்கிட் பிந்தாங் குண்டு வெடிப்பு: குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவர் – நஜிப் உறுதி

புக்கிட் பிந்தாங் குண்டு வெடிப்பு: குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவர் – நஜிப் உறுதி

411
0
SHARE
Ad

Sun-Complex-Bukit-Bintang-கோலாலம்பூர், அக்டோபர் 9 – புக்கிட் பிந்தாங்கில் நிகழ்ந்துள்ள கையெறி குண்டு வெடிப்புச் சம்பவத்திற்கு காரணமானவர்கள் நிச்சயமாக தண்டிக்கப்படுவர் என பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் தெரிவித்துள்ளார்.

சட்டத்திற்கு விரோதமான இத்தகைய செயல்களை நிச்சயமாக பொறுத்துக் கொள்ள முடியாது என்றார் அவர்.

“புக்கிட் பிந்தாங்கில் நிகழ்ந்துள்ள வன்முறைச் சம்பவத்திற்கு எனது கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். இது தொடர்பான போலீஸ் விசாரணை தற்போது நடந்து வருகிறது. இக்குற்றச் செயலுக்கு காரணமான குற்றவாளிகள் நீதியின் முன் நிறுத்தப்படுவர்,” என இன்று வியாழக்கிழமை மதியம் வெளியிட்ட அறிக்கை ஒன்றில் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

#TamilSchoolmychoice

குண்டர் கும்பல் தகராறு காரணமாகவே இச்சம்பவம் நிகழ்ந்துள்ளதாக காவல்துறை சந்தேகிக்கிறது. மேலும் இதற்கு தீவிரவாத முகாந்திரம் ஏதும் இல்லை என்றும் காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

புக்கிட் பிந்தாங் சன் கொம்ப்ளக்ஸ் கட்டிட வளாகத்தில் வெடித்த அக்குறிப்பிட்ட கையெறி குண்டு உள்நாட்டில் தயாரிக்கப்பட்டது அல்ல என்று கோலாலம்பூர் குற்றவியல் புலனாய்வு பிரிவின் தலைவர் கேன் கோங் கெங் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இச்சம்பவத்தில் சீனாவைச் சேர்ந்த இருவர், தாய்லாந்து மற்றும் சிங்கப்பூரைச் சேர்ந்த தலா ஒருவர் உட்பட 14 பேர் காயமடைந்தனர். மலேசியாவைச் சேர்ந்த ஒருவர் பலியாகி உள்ளார்.