Home நாடு எம்எச்17 பேரிடர்: ஆஸ்திரேலியப் பயணி பிராணவாயுக் கவசம் அணிந்திருந்தார் – அதிர்ச்சித் தகவல்

எம்எச்17 பேரிடர்: ஆஸ்திரேலியப் பயணி பிராணவாயுக் கவசம் அணிந்திருந்தார் – அதிர்ச்சித் தகவல்

482
0
SHARE
Ad

L1MH17-Logo-CR2கோலாலம்பூர், அக்டோபர் 10 – எம்எச்17 பேரிடரில் பலியான பயணிகளில் ஒருவர் பிராண வாயு கவசம் (Oxygen Mask) அணிந்து இருந்தார் என்ற தகவலை டச்சு அதிகாரிகள் நேற்று வெளியிட்டுள்ளனர்.

அப்படியானால், கிளர்ச்சியாளர்களால் விமானம் சுட்டு வீழ்த்தப்படவுள்ளது அந்த பயணிக்கு முன்பே தெரிந்திருக்குமா? என அனைத்துத் தரப்புகளில் இருந்தும் தற்போது கேள்விகள் எழுந்துள்ளன.

ஆஸ்திரேலிய நாட்டவரான அந்த பயணியின் முகத்தில் அந்த பிராண வாயுக் கவசம் இல்லை என்றும், மாறாக அவரது கழுத்தைச் சுற்றி இருந்தது என்றும் டச்சு நாட்டின் தேசிய அரசு தரப்பு வழக்கறிஞரின் அலுவலகத்தைச் சேர்ந்த செய்தித் தொடர்பாளர் விம் டெ புருயின் தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

மேலும், பிரேதப் பரிசோதனையில் அந்த பயணியின் கைரேகை, உமிழ்நீர் மற்றும் மரபணு ஆகியவற்றில் இருந்து எந்த ஒரு தடயமும் கிடைக்கவில்லை என்றும், எனவே எப்படி முகக் கவசம் அவரது கழுத்தில் வந்தது என்றும் இன்னும் கண்டறியப்படவில்லை என்றும் புருயின் தெரிவித்துள்ளார்.

அதேவேளையில், அந்த ஒரு பயணியைத் தவிர மற்ற பயணிகள் யாரும் பிராண வாயுக் கவசம் அணிந்திருக்கவில்லை என்றும் புருயின் குறிப்பிட்டுள்ளார்.