Home இந்தியா மீண்டும் ஸ்ரீரங்கம் தொகுதியில் போட்டியிடுகிறாரா ஜெயலலிதா?

மீண்டும் ஸ்ரீரங்கம் தொகுதியில் போட்டியிடுகிறாரா ஜெயலலிதா?

510
0
SHARE
Ad

jayalalithaசென்னை, அக்டோபர் 24 – ஜெயலலிதா மீண்டும் ஸ்ரீரங்கம் தொகுதியில் போட்டியிடுவார் என தகவல்கள் வெளியாகியுள்ளது. கடந்த 1991- 90ம் ஆண்டுகளில் தமிழக முதல்வராக இருந்த போது ஜெயலலிதா வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கில் கடந்த மாதம் 27-ம் தேதி ஜெயலலிதாவுக்கு நான்காண்டு சிறைத் தண்டனையும், 100 கோடி ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.

இதற்கிடையே கடந்த 17-ம் தேதி உச்ச நீதிமன்றம், டிசம்பர் 18-ம் தேதிக்குள் ஜெயலலிதா உட்பட நால்வரும் மேல் முறையீட்டு மனுவை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.

#TamilSchoolmychoice

இந்த வழக்கில் ஜெயலலிதா பதவி இழந்தவுடன், ஸ்ரீரங்கம் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையில், முன்னால் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும், அ.தி.மு.க., நிர்வாகிகளிடையே எதிர்பார்ப்பு ஏற்பட்டது.

ஆனால் உச்சநீதிமன்றம் வழங்கிய இடைக்கால ஜாமீன் தொடர்பான உத்தரவுப்படி, வருகிற மார்ச் மாதத்திற்குள் ஸ்ரீரங்கம் தொகுதியில் இடைத்தேர்தல் நடத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே அதற்குள் ஜெயலலிதா வழக்கில் இருந்து விடுபட்டு, மீண்டும் ஸ்ரீரங்கம் தொகுதியில் போட்டியிடுவார் என அதிமுகவினர் தெரிவித்தனர்.