Home வணிகம்/தொழில் நுட்பம் கூகுள் யூடியூப் மியூசிக் கீ சேவையை அறிமுகப்படுத்தியது!

கூகுள் யூடியூப் மியூசிக் கீ சேவையை அறிமுகப்படுத்தியது!

627
0
SHARE
Ad

YouTube-Music-Keyகோலாலம்பூர், நவம்பர் 15 – கூகுள் நிறுவனம் சமீபத்தில் தனது  காணொளி ஊடகமான ‘யூ டியூப்’ (You Tube)-ல் புதிய வசதி ஒன்றை அறிமுகப்படுத்தி உள்ளது.

‘யூ டியூப் மியூசிக் கீ’ (YouTube Music Key) என்ற அந்த புதிய வசதி இசைப் பிரியர்களை கவர்ந்து இழுக்கும் விதத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த சேவையைப் பயன்படுத்தி பயனர்கள் தங்களுக்குத் தேவையான பாடல்கள் மற்றும் இசையினை சந்தா செலுத்திப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

#TamilSchoolmychoice

இதில் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால், சந்தா செலுத்தி அனுமதி பெரும் பயனர்கள், தங்கள் ‘பிளேலிஸ்ட்’ (Playlist)-ஐ இணையம் இல்லாத சமயங்களிலும் பயன்படுத்த முடியும்.

மேலும், யூ டியூப்-ல் பயனர்களின் பொறுமையை சோதிக்கும் விளம்பரங்கள் இதில் இடம்பெறாது.

unnamedயூ டியூப் மியூசிக் கீ:

கடந்த புதன் கிழமை கூகுள் நிறுவனம் அறிமுகப்படுத்திய இந்த சேவை பயனர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பினை பெற்றுள்ளது. தற்சமயம் இந்த சேவையை விளம்பரப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்திற்காக, முதல் சந்தாவாக 7.99 அமெரிக்க டாலர்களை கூகுள் நிறுவனம் நிர்ணயித்துள்ளது.

எனினும், வரும் மாதங்களில் இது 9.99 அமெரிக்க டாலர்களாக உயர்த்தப்படும் என்று கூறப்படுகின்றது. பயனர்கள் சந்தாவினை செலுத்திய உடன் தேவையான அனுமதி மற்றும் பிளேலிஸ்ட் வழங்கப்படும்.

ஆப்பிள் நிறுவனம் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பீட்ஸ் மியூசிக்-ஐ வாங்கி பயனர்களுக்குத் தேவையான இசை மற்றும் பாடல்களை வழங்கி வருகின்றது.

அதற்குப் போட்டியாகவே கூகுள் இந்த புதிய வசதியினை யூ டியூப்-ல் அறிமுகம் செய்திருப்பதாக தொழில்நுட்ப பத்திரிக்கைகள் கூறுவது குறிப்பிடத்தக்கது.