Home நாடு தேசிய சுனாமி எச்சரிக்கை மையத்தின் சோதனை முயற்சி வெற்றி!

தேசிய சுனாமி எச்சரிக்கை மையத்தின் சோதனை முயற்சி வெற்றி!

404
0
SHARE
Ad

095128x92qh22vi2v0wgv0பினாங்கு, நவம்பர் 25 – தேசிய அளவில் சுனாமி எச்சரிக்கை விடுக்கும் அமைப்பின் சோதனை முயற்சியை வெற்றிகரமாக செய்து முடித்துள்ளது பினாங்கு வானிலை ஆய்வு மையம்.

டேவான்ஸ்ரீ பினாங்கில் உள்ள கார் நிறுத்துமிடம், பத்து ஃபெர்ரிங்கியில் உள்ள பந்தாய் மியாமி மற்றும் தஞ்சோங் டோக்கோங் காவல் நிலையம் ஆகிய இடங்களில் உள்ள சுனாமி எச்சரிக்கை அமைப்புகளில் நடத்தப்பட்ட சோதனை எந்தவிதச் சிக்கலும் இன்றி வெற்றிகரமாக நடந்தேறி உள்ளது.

எனினும் சில தொழில்நுட்ப கோளாறுகள் காரணமாக கர்னேவில் உள்ள சுனாமி எச்சரிக்கை அமைப்பில் மட்டும் இச்சோதனை நடத்தப்படவில்லை என்றும்இச்சோதனை பிறிதொரு தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டதாகவும் பினாங்கு வானிலை மையத்தின் துணை இயக்குநர் யுசாய்மி மஹட் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

மொத்தம் 6 இடங்களில் இந்த எச்சரிக்கை அமைப்பு அண்மையில் நிறுவப்பட்டது. இந்த இடங்களில் எச்சரிக்கை ஒலி எழுப்பக்கூடிய மிகப் பெரிய சைரன்கள் உள்ளன. இவை எழுப்பும் ஒலியை சுமார் 3 கிலோமீட்டர் சுற்றுவட்டாரத்தில் தெளிவாகக் கேட்க முடியும். சுனாமி எச்சரிக்கை என்பது 3 கட்டங்களை உள்ளடக்கியது.”

முதற்கட்டமாக கடலோர பகுதிகள் மற்றும் கடற்கரையை விட்டு விலகிச் செல்லுமாறு எச்சரிக்கை விடுக்கப்படும். அடுத்து சுனாமி பகுதியில் இருந்து வெளியேறுமாறு எச்ரிக்கை வரும். மூன்றாவது சுனாமி எச்சரிக்கையை திரும்பப் பெறுவது,” என்றார் யுசாய்மி மஹட்.