கோலாலம்பூர், நவம்பர் 25 – மாயமான எம்எச்370 விமானத்தின் உடைந்த பாகங்கள் இந்தோனேசிய கடற் பகுதியில் கரை ஒதுங்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
239 பேருடன் மாயமாகி 9 மாதங்கள் ஆகிவிட்ட எம்எச்370 விமானத்தை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வரும் வேளையில், ஆஸ்திரேலியப் போக்குவரத்துப் பாதுகாப்புக் குழுவின் விபத்துப் புலனாய்வாளர் பீட்டர் போலே இந்த அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.
சுமார் 180 பேர் அடங்கிய குழு ஒன்று, அவ்விமானம் மாயமானது தொடர்பான மர்மத்தை கண்டு பிடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது என பீட்டர் போலே கூறியுள்ளார்.
இந்நிலையில் இந்தோனேசியாவின் சுமத்ரா கடற்கரையில் அவ்விமானத்தின் பாகங்களில் ஏதேனும் பொருள் கரை ஒதுங்கக் கூடும் என்று பீட்டர் அறிவித்துள்ளார்.
அப்பகுதியிலுள்ள பலர் அவ்வாறு கரை ஒதுங்கும் பொருட்களை உள்ளூர் காவல்துறையிடம் ஒப்படைத்து வருகின்றனர் என்றும் கூறப்படுகின்றது.