வாஷிங்டன், டிசம்பர் 6 – மலேசியாவில் தேச நிந்தனைச் சட்டம் தொடர்ந்து நீடிப்பது குறித்த அரசாங்கத்தின் முடிவு, எதிர்கட்சியினரை மட்டுல்லாமல் அமெரிக்காவையும் கவலையடையச் செய்திருக்கின்றது.
அமெரிக்க துணை அதிபர் ஜோ பிடென் நேற்று தனது டுவிட்டர் பக்கத்தில், மலேசிய அரசாங்கம் தேச நிந்தனைச் சட்டத்தைப் பயன்படுத்தி எதிர்கட்சியினரை ஒடுக்க நினைப்பது கவலையளிப்பதாகத் தெரிவித்துள்ளார்.
எதிர்கட்சித் தலைவர் அன்வார் இப்ராஹிமின் மேல்முறையீடு, ஜனநாயகத்திலும் நீதித் துறையிலும் நம்பிக்கையை மேம்படுத்தவும், அனைத்து செயல்களையும் முறைப்படுத்தவும், மலேசியாவிற்கு ஒரு நல்ல வாய்ப்பை ஏற்படுத்தியிருப்பதாக ஜோ பிடேன் சுட்டிக்காட்டினார்.