Home தொழில் நுட்பம் பேஸ்புக் தளத்தில் கூகுளுக்கு நிகரான தேடல் வசதி!

பேஸ்புக் தளத்தில் கூகுளுக்கு நிகரான தேடல் வசதி!

634
0
SHARE
Ad

cnwintech-facebook-logoகோலாலம்பூர், டிசம்பர் 10 – பேஸ்புக் நிறுவனம் தனது தளத்தில், பயனர்கள் தங்கள் பதிவுகளை எளிதாக கண்டறிந்து கொள்ள புதிய மேம்படுத்தப்பட்ட தேடல் வசதியை அறிமுகப்படுத்த உள்ளது.

பேஸ்புக்கில், பயனர்கள் தங்கள் பழைய பதிவுகளை கண்டறிய நினைப்பது இதுவரை எளிதான காரியமாக இருந்ததில்லை. இக்குறையை போக்க பேஸ்புக், கூகுளுக்கு நிகரான புதிய வசதியை அறிமுகப்படுத்த உள்ளது.

கூகுள் தேடு பொறியில், பயனர்கள் தங்களுக்குத் தேவைப்படும் தகவல்களைப் பெற, குறிப்பிட்ட அந்த தகவல்களுக்குத் தொடர்புடைய வார்த்தைகளையோ அல்லது படங்களையோ பயன்படுத்தலாம். கணக்கிட முடியாத தகவல்களை கூகுள் கொண்டிருந்தாலும், குறிப்பிட்ட அந்த வார்த்தைகளை வைத்து, அதற்குத் தொடர்புடைய தகவல்களை பயனர்களுக்கு கொடுக்கும்.

#TamilSchoolmychoice

அதே போன்று பேஸ்புக், பயனர்கள் பயன்படுத்தும் வார்த்தைகளைக் கொண்டு, அவர்களின் பழைய பதிவுகளை கண்டறியும் முறையை கடந்த சில மாதங்களாக ஆராய்ந்து வந்தது. இந்நிலையில் அதனை இன்னும் சில நாட்களில் அறிமுகப்படுத்த இருக்கின்றது.

இது குறித்து பேஸ்புக் நிறுவனத்தின் துணைத் தலைவர் டாம் ஸ்டாகி கூறுகையில், “2013-ம் ஆண்டு அறிவிக்கப்பட்ட கிராப் சர்ச்‘ (Graph Search) விரைவில் அறிமுகப்படுத்தப்படும். இதன் மூலம் பயனர்கள் எண்ணற்ற பதிவுகளில் இருந்து தங்கள் பழைய பதிவுகளை கண்டறிய முடியும். அதேபோல் மற்ற பயனர்கள், தங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொண்ட பதிவுகளையும் கண்டறியலாம்.”

பேஸ்புக் தளத்தில் தேடுதல் வசதி என்பது நீண்ட கால முயற்சி. அது விரைவில் செயல்பட இருக்கின்றது என்று அவர் கூறியுள்ளார்.