Home இந்தியா இந்தியாவுக்கான அமெரிக்க தலைமை தூதராக ராகுல் வர்மா ஒருமனதாக தேர்வு!

இந்தியாவுக்கான அமெரிக்க தலைமை தூதராக ராகுல் வர்மா ஒருமனதாக தேர்வு!

554
0
SHARE
Ad

Verma-Richவாஷிங்டன், டிசம்பர் 11 – அமெரிக்க அதிபர் ஒபாமா, அடுத்த மாதம் இந்தியா வரவுள்ள நிலையில், இந்திய அமெரிக்கரான, ரிச்சர்டு ராகுல் வர்மாவை (46) இந்தியாவுக்கான அமெரிக்க தூதராக நியமித்து, அமெரிக்க செனட் சபை நேற்று ஒப்புதல் வழங்கியது.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதராக இருந்த அமெரிக்க நான்சி போவல், இந்த ஆண்டு மார்ச் மாதம் திடீரென அந்தப் பதவியிலிருந்து ராஜினாமா செய்தார்.

அதன்பின் காலியாக இருந்த அந்த இடத்திற்கு, அமெரிக்க வெளியுறவுத் துறையில் முக்கிய பதவி வகிக்கும் ராகுல் வர்மாவை, ஒபாமா நிர்வாகம் பரிந்துரை செய்தது.

#TamilSchoolmychoice

இத்தகைய உயரிய பதவிக்கு, செனட் சபையின் ஒப்புதல் அவசியம் என்பதால், கடந்த வாரம் செனட் சபையில் தன் தரப்பு கருத்துகளை வர்மா எடுத்து வைத்தார்.

அவற்றை கேட்ட செனட் சபை நாடாளுமன்ற உறுப்பினர்கள் திருப்தி தெரிவித்ததை அடுத்து, இந்தியாவுக்கான தூதராக ராகுல் வர்மா நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டார்.

இந்திய குடியரசு தின விழாவில் பங்கேற்க, அதிபர் ஒபாமா, அடுத்த மாதம் இந்தியா வரவுள்ளார். அதற்கு முன், ராகுல் வர்மா இந்தியா வந்து பொறுப்பேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் இந்த பொறுப்பை ஏற்கும் முதல் இந்தியர் என்ற பெருமையை இவர் பெறுகிறார்.