Home நாடு கணவர்களை கட்டுக்குள் வைக்கும் இரகசிய ஆயுதம் – பெண்களுக்கு ரோஸ்மா அறிவுரை

கணவர்களை கட்டுக்குள் வைக்கும் இரகசிய ஆயுதம் – பெண்களுக்கு ரோஸ்மா அறிவுரை

731
0
SHARE
Ad

rosmah-mansorகோலாலம்பூர், டிசம்பர் 16 – திருமண உறவு நல்லிணக்கமாக இருக்க ஒவ்வொரு மனைவியும் சில ‘இரகசிய ஆயுதங்களை’ பயன்படுத்தி தங்களிடத்தில் கணவர்கள் அன்பாக இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும் என்று பிரதமரின் மனைவியான ரோஸ்மா மன்சோர் பெண்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.

மசீச கட்சியின் மகளிர் பிரிவு சட்ட ஆலோசனை மற்றும் மகளிர் உதவி மையம் துவக்க விழாவில் கலந்து கொண்ட ரோஸ்மா, “நமக்கு சில இரகசிய ஆயுதங்கள் உள்ளது. அவற்றை பயன்படுத்தினால் திருமண உறவை நல்லிணக்கமாகக் கொண்டு செல்லலாம். ஒருவேளை கணவர்கள் அதை காது கொடுத்துக் கேட்கவில்லை என்றால் பிறகு வியாபாரம் பேச வேண்டிய நேரம் வந்து விட்டது என்று அர்த்தம்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், கணவரிடத்தில் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு விவாதம் நடக்கும் பொழுது, பெண்கள் தங்கள் கணவர்களிடத்தில் இதமான மற்றும் மென்மையான அணுகுமுறையை கடை பிடிக்குமாறு குறிப்பிட்டுள்ளார்.

#TamilSchoolmychoice

“ஆண்கள் மூர்க்கத்தனமானவர்கள் கிடையாது. அவர்களுக்கு நீங்கள் தேவைப்படும் பொழுது உடன் இருங்கள்- அதை தான் ஒரு பிரதமரின் மனைவியான நானும் செய்கின்றேன்” என்று ரோஸ்மா தெரிவித்துள்ளார்.