Home வாழ் நலம் சளி, இருமலை குணமாக்கும் ஆடாதொடை இலை

சளி, இருமலை குணமாக்கும் ஆடாதொடை இலை

5227
0
SHARE
Ad

aadaa thodaடிசம்பர் 19 – ஆடாதொடை செடி நீண்ட முழுமையான ஈட்டிவடிவ இலைகளையும், வெள்ளை நிறப் பூக்களையும் உடைய குறுஞ்செடி. இச்செடி வேலியில் வைத்து வளர்க்கப்படுகிறது.

இதன் இலை, பூ, வேர் ஆகியவை மருத்துவப் பயனுடையவை. சளி நீக்கி இருமல் தணிப்பானாகவும், வயிற்றுப் பூச்சிக் கொல்லியாகவும், நோய் நீக்கியாகவும் செயற்படும்.

1. ஆடாதொடை இலைச் சாறும் தேனும் சம அளவு கலந்து சர்க்கரை சேர்த்து தினம் 4 வேளை கொடுக்க நுரையீரல் இரத்த வாந்தி, மூச்சுத் திணறல், இருமல் ஆகியவை குணமாகும்.

#TamilSchoolmychoice

2.ஆடாதொடை இலைச் சாறு 2 தேக்கரண்டி எருமைப்பாலில் காலை, மாலை கொடுத்து வரச் சீதபேதி, இரத்தப்பேதி குணமாகும்.

3.10 இலைகளை அரை லிட்டர் நீரில் போட்டுக் கால் லிட்டராகக் காய்ச்சித் தேன் கலந்து காலை, மாலை 40 நாள்கள் பருகி வர என்புருக்கிக் காசம், இரத்தக் காசம், சளி ஆகியவைத் தீரும்.

adathodai4.ஆடாதொடை வேருடன் கண்டங்கத்திரி வேர் சமனளவு சேர்த்து இடித்துச் சலித்து அரை முதல் 1 கிராம் வரை தேனில் சாப்பிட்டு வர நரம்பு இழுப்பு, சுவாச காசம், சளி, இருமல், சளிச்ஜுரம், என்புருக்கி, குடைச்சல் வலி ஆகியவை குணப்படும்.

5.ஆடாதொடை இலையையும், சங்கன் இலையையும் ஒரு பிடி எடுத்து அரை லிட்டர் நீரில் போட்டுப் பாதியாகக் காய்ச்சிக் காலை, மாலை பருகி வர விக்கல், வாந்தி, வயிற்றவலி தீரும்.

6.உலர்ந்த ஆடாதொடை இலைத் தூளை ஊமத்தை இலையில் சுருட்டிப் ஆவிபிடிக்கத்தால் மூச்சுத் திணறல் தீரும்.