Home கலை உலகம் ஆந்திர புயல் நிவாரணத்துக்கு ரஜினிகாந்த் ரூ.5 லட்சம் உதவி!

ஆந்திர புயல் நிவாரணத்துக்கு ரஜினிகாந்த் ரூ.5 லட்சம் உதவி!

516
0
SHARE
Ad

rajiniசென்னை, டிசம்பர் 22 – சமீபத்தில் ஆந்திராவை ‘ஷூட்ஷூட்’ புயல் தாக்கியது. இதில் கடலோர ஆந்திராவில் விசாகப்பட்டினம், விஜயநகரம், ஸ்ரீகாகுளம் மாவட்டங்களில் கடுமையான பொருட்சேதமும், பயிர் சேதமும் ஏற்பட்டது.

புயல் பாதித்த மக்களுக்கு உதவுவதற்காக ஐதராபாத்தில் தெலுங்கு திரை உலகம் சார்பில் நட்சத்திர கலை விழா நடத்தப்பட்டு நிதி உதவி வழங்கப்பட்டது. இதுதவிர நடிகர் – நடிகைகள், தொழில் அதிபர்கள் தனிப்பட்ட முறையிலும் முதல்வர் சந்திரபாபு நாயுடுவைச் சந்தித்து நிதி உதவி அளித்து வருகிறார்கள்.

நடிகர் ரஜினிகாந்த் சில நாட்களுக்கு முன் ஐதராபாத்தில் தனது ‘லிங்கா’ படத்தின் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு பேசுகையில், “நட்சத்திர கலை விழாவில் தன்னால் கலந்துகொள்ள முடியாமல் போனதாகவும், என்றாலும் புயல் பாதித்த மக்களுக்கு உதவி செய்வேன் என்றும் அறிவித்து இருந்தார்”.

#TamilSchoolmychoice

அதன்படி நடிகர் ரஜினிகாந்த் ஆந்திர புயல் நிவாரண நிதியாக ரூ.5 லட்சம் வழங்கியுள்ளார். சென்னையில் ரஜினிகாந்த் நடத்தும் ராகவேந்திரா ஆசிரமம் சார்பில் ரூ.5 லட்சத்துக்கான காசோலையை ஆந்திர முதலவர் சந்திரபாபு நாயுடுவுக்கு அனுப்பியுள்ளார்.