Home கலை உலகம் தனுஷுக்கு ஜோடியான எமி ஜாக்சன், சமந்தா!

தனுஷுக்கு ஜோடியான எமி ஜாக்சன், சமந்தா!

857
0
SHARE
Ad

dha_1சென்னை, டிசம்பர் 30 – வேல்ராஜ் இயக்கத்தில் தனுஷ் , அமலா பால் இணைந்து நடித்த ’வேலையில்லா பட்டதாரி’ அனைத்து தரப்பு மக்கள் மத்தியிலும் பாராட்டுக்களை பெற்றது.

இந்நிலையில் மீண்டும் இந்தக் குழு அடுத்த படம் ஒன்றை ஆரம்பிக்க உள்ளதாம். அதற்கு இசை அனிருத் மற்றும் படத்தின் நாயகி எமி ஜாக்சன் எனவும் தனுஷ் டுவிட்டரில் தெரிவித்திருந்தார்.

அடுத்த டுவீட்டாக தனுஷ் ,அனிருத் மற்றும் சமந்தாவுடன் இணைந்திருக்கும் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு , ‘விஐபி’ குழு சமந்தாவை வரவேற்கிறது. பிப்ரவரி 2015-ல் இருந்து படப்பிடிப்பு ஆரம்பம் ” என டுவீட் செய்திருந்தார் தனுஷ்.

#TamilSchoolmychoice

இப்போது சதீஷுடன் இருக்கும் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு ‘ விஐபி குழுவிற்கு புது நபர், உற்சாகமான சதீஷ் , எமி ஜாக்சன், சமந்தா , இன்னும் நிறைய இருக்கு’ என டுவீட் செய்துள்ளார் தனுஷ். இதன் மூலம் படத்தில் எமி மற்றும் சமந்தா என இரண்டு நாயகிகள் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.