Home இந்தியா ஏர் இந்தியா விமானத்தை கடத்தும் தீவிரவாதிகளின் திட்டம் அம்பலம்! 

ஏர் இந்தியா விமானத்தை கடத்தும் தீவிரவாதிகளின் திட்டம் அம்பலம்! 

422
0
SHARE
Ad

air-indiaபுதுடெல்லி, ஜனவரி 5 – டெல்லி-காபூல் இடையே பறக்கும் ஏர் இந்தியா விமானத்தை கடத்தி, பயணிகளை பிணையக் கைதிகளாக்கும் தீவிரவாதிகளின் சதித் திட்டத்தை உளவுத்துறையினர் கண்டறிந்துள்ளனர்.

இது தொடர்பாக, அவர்கள் இந்திய அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். விமானத்தில் பயணம் செய்யும் பயணிகள் மட்டுமல்லாது, விமான நிலைய ஊழியர்கள்,

விமான நிறுவனங்களின் ஊழியர்கள் என அனைவரையும் கடும் சோதனைக்கு உட்படுத்துமாறு உளவுத்துறை நிர்பந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

#TamilSchoolmychoice

கடந்த 1999-ம் ஆண்டு இந்தியன் ஏர்வேசின் ஐசி814. விமானத்தை ஆப்கானிஸ்தானில் உள்ள காந்தகாருக்கு தீவிரவாதிகள் கடத்திச் சென்றனர். அதேபோன்று, இம்முறையும் விமானம் கடத்தப்படலாம் என உளவுத்துறை எச்சரித்துள்ளது.

இதேற்கிடையே, கொல்கத்தாவில் ஏர் இந்தியா விமானத்தை கடத்தப்போவதாக நேற்று முன்தினம் மர்ம நபர் மிரட்டல் விடுத்ததால், அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.