Home இந்தியா சென்னையில் மதிமுகவின் ‘மதுவிலக்கு மாரத்தான்’ – 2 இலட்சம் பேர் பங்கேற்பு!

சென்னையில் மதிமுகவின் ‘மதுவிலக்கு மாரத்தான்’ – 2 இலட்சம் பேர் பங்கேற்பு!

673
0
SHARE
Ad

2_2267975fசென்னை, ஜனவரி 5 – மதிமுக சார்பில் நேற்று மது விலக்கை வலியுறுத்தி மாரத்தான் ஓட்டம் சென்னையில் நடந்தது. இதில் கட்சி பொதுச் செயலாளர் வைகோவும் கலந்து கொண்டு ஓடினார்.

மதுப்பழக்கத்தை அறவே ஒழிக்க வேண்டும் என்ற மன நிலையை மாணவர்கள் மத்தியில் ஏற்படுத்துவதற்காக இந்த மாரத்தான் போட்டி நடைபெற்றது.

நேற்று காலை 6.30 மணிக்கு சென்னை, அண்ணாசாலை, சிம்சன் அருகில் உள்ள பெரியார் சிலை அருகே சிவானந்தா சாலையில் தொடங்கி மெரினா கடற்கரை வழியாக கலங்கரை விளக்கம் (லைட் ஹவுஸ் ) அருகே நிறைவு பெற்றது.

#TamilSchoolmychoice

vzaiko-marathinமதிமுக பொதுச்செயலாளர் வைகோ இந்த மாரத்தான் ஓட்டத்தை கொடி அசைத்து தொடங்கி வைத்தார். இதில், 6-ஆம் வகுப்பு முதல் கல்லூரிகளிலும் பயிலும் மாணவ மாணவியர் ஏழு பிரிவுகளில் கலந்து கொண்டனர்.

இலட்சக்கணக்கான மாணவ, மாணவியர் இந்த ஓட்டத்திற்குத் திரண்டு வந்திருந்தனர். அனைவரும் ஆர்வத்தோடு இதில் கலந்து கொண்டு ஓடினர். மாணவர்களோடு மதுவிலக்கு மராத்தான் ஓட்டத்தில் இணைந்து கொண்டு வைகோவும் ஓடினார்.

maarathanமாணவிகள் 6-ஆம் வகுப்பு கல்லூரி வரை என்று 7 பிரிவுகளாக போட்டி நடைபெற்றது. 5 கி.மீ. தொலைவுக்குள் பல இடங்களில் தேவைப்படும் முதலுதவி வழங்க மருத்துவர்களும், அவசர உதவி வாகனங்களும் சேவை புரியும் வகையில் மதிமுக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

அனைத்துப் போட்டிகளும் நிறைவு பெற்றதும் 7 பிரிவுகளில் வெற்றி பெற்ற 35 நபர்களுக்கும் மதிமுக பொதுச்செயலார் வைகோ பரிசுத் தொகை வழங்கி பாராட்டுத் தெரிவித்தார்.

vaikoஒவ்வொரு பிரிவிலும் வெற்றி பெற்றவர்களுக்கு முதல் பரிசு ரூ. 25,000/- இரண்டாம் பரிசு ரூ. 15,000/- மூன்றாம் பரிசு ரூ. 10,000/- நான்காம் பரிசு ரூ. 7,000/- .

ஐந்தாம் பரிசு ரூ. 5,000/- வீதம் பரிசுத் தொகை வழங்கப்பட்டது.மேலும் போட்டியில் பங்கேற்று நிறைவு செய்த அனைவருக்கும் பங்கேற்புச் சான்றிதழ் வழங்கப்பட்டது.