Home உலகம் தமிழர்களால் எனக்கு தோல்வி: ராஜபக்சே காட்டம்!  

தமிழர்களால் எனக்கு தோல்வி: ராஜபக்சே காட்டம்!  

757
0
SHARE
Ad

கொழும்பு, ஜனவரி 11 – இலங்கை அதிபர் தேர்தலில் தமிழர்களால் தான் நான் தோற்கடிக்கப்பட்டேன் என்று ராஜபக்சே கூறியுள்ளார். மேலும் அவர், புதிய அரசாலும் தமிழர்களுக்கு ஒரு நலனும் கிடைக்கப்போவதில்லை என்று மறைமுகமாகக் கூறியுள்ளார்.

????????????????????????????
விடைபெற்றுச் செல்லும் ராஜபக்சே…

நடந்து முடிந்த இலங்கை அதிபருக்கான தேர்தலில் தோல்வி அடைந்த பின்னர் ராஜபக்சே கூறியதாவது:-

“வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தமிழர்கள் எனக்கு எதிராக வாக்களித்துள்ளனர். மலையகத் தமிழர்களும் எனக்கு வாக்களிக்கவில்லை. ஒட்டுமொத்தமாக தமிழர்கள் எனக்கு வாக்கு அளிக்காததால் நான் தோற்கடிக்கப்பட்டேன். இந்த தோல்வியை என்னால் ஏற்றுக் கொள்ள இயலாது.”

#TamilSchoolmychoice

“இதனை நான் ஒரு தோல்வியாகவே கருதவில்லை. நான் அதிபர் தேர்தலில் தோற்றாலும், ஆட்சி அதிகாரம் சிங்களர்களிடம் தான் உள்ளது. எனவே என் தோல்வியால் தமிழர்களுக்கு எந்த பலனும் கிடைக்கப் போவதில்லை” என்று அவர் கூறியுள்ளார்.

ஈழத்தமிழர்களுக்கு இதுவரை எந்த உரிமையும் கிடைக்கவில்லை, இனியும் கிடைக்காது என்பதை மறைமுகமாக உணர்த்துவது போல் ராஜபக்சேயின் பேச்சு அமைந்துள்ளது.

தோல்விக்குப் பிறகு ராஜபக்சேவிற்கு எதிர்பார்த்தது போல் கடும் எதிர்ப்புகள் எழத் துவங்கி உள்ளன. அவர் இருக்கும் சுதந்திர கட்சியின் தலைவர் பதவியை அவரிடம் இருந்து பறிக்க முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா தீவிர முயற்சிகளில் இறங்கியுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

இதற்கிடையில் ராஜபக்சே ஆட்சிக் காலத்தில் முஸ்லீம் சமுதாயத்திற்கு எதிராக நிகழ்ந்த சில விரும்பத்தகாத சம்பவங்களின் காரணமாக, இலங்கையின் முஸ்லீம் வாக்காளர்களின் வாக்குகளும் ராஜபக்சேயிற்கு எதிராக விழுந்ததுதான் அவருடைய தோல்விக்கான மற்றொரு காரணம் என்றும் அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.