Home நாடு வெள்ளப் பேரிடருக்கு அனைவரும் பொறுப்பேற்க வேண்டும்: நஜிப்

வெள்ளப் பேரிடருக்கு அனைவரும் பொறுப்பேற்க வேண்டும்: நஜிப்

835
0
SHARE
Ad

Najib Malaysiaபெக்கான், ஜனவரி 11 – நாட்டில் நிலவும் வெள்ளப் பேரிடருக்காக அரசாங்கத்தை மட்டும் குறைகூறக் கூடாது என பிரதமர் நஜிப் கூறியுள்ளார். வெள்ளப் பேரிடர் ஏற்படுவதற்கான காரணங்களைக் களைவதற்கு அனைத்து மலேசியர்களும் பொறுப்பேற்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தி உள்ளார்.

“நாட்டின் குடிமக்கள் என்ற வகையில் நாம் அனைவரும் சட்டங்களையும் விதி முறைகளையும் முறையாகப் பின்பற்றுகிறோமா என்பதே முக்கியம். ஒரு ஏக்கர் விவசாய நிலத்திற்கு அனுமதி வழங்கப்பட்டால், கூடுதலாக நான்கு ஏக்கரைச் சேர்த்து சட்டவிரோத விவசாயத்தில் ஈடுபடக் கூடாது,” என்று பிரதமர் நஜிப் அறிவுறுத்தி உள்ளார்.

சுரங்கமோ அல்லது விவசாயமோ, குறிப்பிட்டதொரு வளர்ச்சித் திட்டத்தைப் பின்பற்ற வேண்டும் என வலியுறுத்தியுள்ள அவர், அவ்வாறு பின்பற்றாவிடில் வெள்ளத்தால் ஏற்படும் விளைவுகளை எதிர்கொண்டே ஆக வேண்டும் எனக் கூறியுள்ளார்.

#TamilSchoolmychoice

“கடவுளால் உருவாக்கப்பட்டவர்கள் என்ற வகையில் அவர் நமக்கு எத்தகைய பாடங்களைக் கற்றுத்தர விரும்புகிறார் என்பதைக் கேட்டறிய வேண்டும். வெள்ளத்தின் பின்னணியில் என்ன உள்ளது என்பதை அறிவதன் மூலம் நமது நம்பிக்கையை வலுப்படுத்திக் கொள்ள முடியும். மேலும் எதிர்காலத்தில் அதை எவ்வாறு சமாளிப்பது என்பதையும் கற்றறிய முடியும்,” என்று நஜிப் தெரிவித்துள்ளார்.