Home தொழில் நுட்பம் விண்டோஸ் 10-ஐ அறிமுகப்படுத்தியது மைக்ரோசாப்ட்!

விண்டோஸ் 10-ஐ அறிமுகப்படுத்தியது மைக்ரோசாப்ட்!

688
0
SHARE
Ad

windows-10_productகோலாலம்பூர், ஜனவரி 22 – மைக்ரோசாப்ட் நிறுவனம் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் தனது விண்டோஸ் 10 பற்றிய அறிவிப்புகளை நேற்று வெளியிட்டது.

அந்நிறுவனம் கடைசியாக வெளியிட்ட இரு இயங்குதளங்களும் பயனர்களிடத்தில் பெரும் வரவேற்பை பெறவில்லை. விண்டோஸ் 7 ஓரளவிற்கு வெற்றி பெற்று இருந்தாலும், விண்டோஸ் 8-ஐ பயனர்கள் பெரும்பாலும் புறக்கணித்தனர்.

அதற்கு முக்கிய காரணம் விண்டோஸ் 8, மைக்ரோசாப்ட் இயங்குதளங்களின் முக்கிய அம்சமான எளிமை, விண்டோஸ் 8-ல் இல்லை. அதனை உணர்ந்த மைக்ரோசாப்ட், விண்டோஸ் 10-ஐ நவீன அம்சங்களுடன், அதேசமயத்தில் எளிதில் பயன்படுத்தும் வகையில் உருவாக்க முடிவு செய்தது.

#TamilSchoolmychoice

இந்நிலையில் நேற்று வாஷிங்டனில் உள்ள ரெட்மான்ட் தலைமை அலுவலகத்தில் விண்டோஸ் 10 பற்றிய அறிவிப்புகளை வெளியிட்டது மைக்ரோசாப்ட். விண்டோஸ் 10-ன் மேம்பாடுகள் குறித்து மைக்ரோசாப்ட் கூறுகையில்,

“விண்டோஸ் 7, 8 மற்றும் 8.1 இயங்குதளங்களைப் பயன்படுத்தும் பயனர்கள் விண்டோஸ் 10-ஐ இலவசமாக மேம்படுத்திக் கொள்ளலாம். இந்த சலுகை விண்டோஸ் போன்களை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கும் பொருந்தும்” என்று கூறியுள்ளது.

விண்டோஸ் 10-ன் சிறப்பு அம்சங்கள்:

ஸ்டார்ட் பட்டி மீண்டும் சேர்ப்பு:

விண்டோஸ் 8-ல் நீக்கப்பட்ட ‘ஸ்டார்ட் பட்டி’ (Start Menu) விண்டோஸ் 10-ல் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளது. அதேபோல் ‘தேடல் பட்டி’ (Search Bar)-ல் விண்டோஸ் 8-ல் உள்ளது போல் Live Tiles-ஐ இணைத்துக் கொள்ள முடியும்.

டெஸ்க்டாப் செயலிகள்:

விண்டோஸ் ஸ்டோரில் உள்ள நவீன செயலிகளின் வடிவமைப்பில் டெஸ்க்டாப் செயலிகளும் மேம்படுத்தப்பட்டுள்ளன. எனவே அந்த செயலிகளின் அளவில் மாறுதல்களை செய்ய முடியும்.

‘குவாட்ரன்ட் லேயவுட்’ (Quadrant Layout):

விண்டோஸ் 10 திரையில் ஒரே சமயத்தில் 4 செயலிகளை இயக்க முடியும். குவாட்ரன்ட் லேயவுட் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த வசதியின் மூலம் பயனர்களுக்கு வேறு வேறு செயலிகளை ஒவ்வொரு முறையும் தனித்தனியே கிளிக் செய்து பயன்படுத்த வேண்டியதில்லை.

மெய்நிகர் டெஸ்க்டாப்:

பயனர்கள் தங்களின் தேவைகளுக்கு ஏற்ற படி தேவையான ‘மெய்நிகர் டெஸ்க்டாப்’ (Virtual Desktop)-களை உருவாக்கி கொள்ள முடியும்.

‘கண்டினம்’ (Continuum) எனும் புதிய வசதி:

விண்டோஸ் 10-ல் Continuum எனும் புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த வசதி மூலம் விண்டோஸ் கருவிகளில் உள்ளீடு மற்றும் வெளியீடு கருவிகளை மாற்றுவது தானாகவே உணர்ந்து கொள்ள முடியும்.

பயனர்கள் சாதாரண விசைப்பலகையில் இருந்து தொடுதிரைக்கு மாறும் பொழுது Continuum வசதி தானியங்கியாக செயல்படும். மேற்கூறிய வசதிகள் மட்டுமல்லாமல் ‘ஸ்பார்டன் உலாவி’ (Spartan Browser),

மெய்நிகர் காட்சிகளுக்காக Project Hololens, கணினி மற்றும் தட்டை கணினிகளுக்கான ‘எக்ஸ்பாக்ஸ் ஒன்’ (Xbox One), விண்டோஸ் 10 போன்களில் மைக்ரோசாப்ட் ஆபீஸ் போன்ற கூடுதல் சிறப்புகளையும் மைக்ரோசாப்ட் நிறுவனம் நேற்று அறிவித்தது குறிப்பிடத்தக்கது.