Home இந்தியா எல்லையில் குண்டு துளைக்காத நுழைவாயில் – இந்தியா திட்டம்!

எல்லையில் குண்டு துளைக்காத நுழைவாயில் – இந்தியா திட்டம்!

514
0
SHARE
Ad

wagah-borderபுதுடெல்லி, பிப்ரவரி 9 – இந்தியா-பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் பாதுகாப்பு நடவடிக்கைக்காக மூன்று இடங்களில் குண்டு துளைக்காத நுழைவாயில் அமைக்க இந்தியா முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்தியாவிற்கும், பாகிஸ்தானுக்கும் இடையே உள்ள வாகா எல்லையில் கடந்த நவம்பர் மாதம் 2-ஆம் தேதி பாகிஸ்தானுக்கு உட்பட்ட பகுதியில் தற்கொலைப்படைத் தாக்குதல் நடத்தப்பட்டது.

கொடி இறக்க நாளின் போது நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் 60-க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவத்தில் இந்திய தரப்பிற்கு எந்த சேதாரமும் இல்லை.

#TamilSchoolmychoice

எனினும், இச்சம்பவத்தை அடுத்து எல்லை தாண்டிய தாக்குதலை தடுக்க பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள இந்தியா முடிவு செய்துள்ளது.

இந்தியா – பாகிஸ்தான் எல்லைப் பகுதிகளான அட்டாரி, ஹுசைனிவாலா, சட்கி ஆகிய இடங்களில் குண்டு துளைக்காத நுழைவாயில்களை அமைக்க பல்வேறு ஏற்பாடுகளை இந்தியா செய்ய உள்ளது.

பஞ்சாப் மாநிலத்தில் இந்த மூன்று எல்லைப் பகுதிகளும் அமைந்துள்ள நிலையில், இது தொடர்பாக, அமிர்தசரஸ் பிரிவு இந்திய எல்லை பாதுகாப்பு படையின் துணை தலைமை ஆய்வாளர் எம்.எப். பரூக்கி கூறியதாவது:-

“உச்சகட்ட பாதுகாப்பு தேவைப்படும் மேற்கூறிய இடங்களில், பாகிஸ்தான் இராணுவம் தேவையான பாதுகாப்பை அளித்து வருகிறது. எனினும், அந்நாட்டின் பாதுகாப்பு ஏற்பாடுகளை மட்டுமே இந்தியா நம்பியிருக்காது” என்று அவர் கூறியுள்ளார்.