Home இந்தியா கருப்பு பணம் விவகாரம்: 60 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கையை தொடங்கியது மத்திய அரசு!

கருப்பு பணம் விவகாரம்: 60 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கையை தொடங்கியது மத்திய அரசு!

579
0
SHARE
Ad

Indian-black-moneyபுதுடெல்லி, பிப்ரவரி 9 – கருப்பு பணம் விவகாரம் தொடர்பாக 60 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கையை மத்திய அரசு தொடங்கியது என்று தகவல் தெரிவித்துள்ளது.

சுவிட்சர்லாந்து, லிச்டென்ஸ்டெயின் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் பலவற்றில் இந்தியாவைச் சேர்ந்த தொழில் அதிபர்கள் கருப்பு பணத்தை பதுக்கி வைத்துள்ளனர்.

வெளிநாட்டு வங்கிகளில் இந்தியர்கள் முறைகேடாக பதுக்கி வைத்துள்ள கருப்பு பணத்தை மீட்டு இந்தியாவுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மூத்த வழக்கறிஞரான ராம்ஜெத் மலானி உச்ச நீதிமன்றத்தில் பொது நல வழக்கு ஒன்றைத் தொடர்ந்தார்.

#TamilSchoolmychoice

இந்த வழக்கின் அடிப்படையில் கருப்பு பணத்தை மீட்பது தொடர்பாக மத்திய அரசு உயர்மட்ட குழு ஒன்றை அமைத்து விசாரித்து வருகிறது.

கருப்பு பணம் பதுக்கியது தொடர்பான வழக்கில், வெளிநாட்டு வங்கிகளில் கணக்கு வைத்துள்ள அனைவரது பெயர்களையும் (627 பேர்கள்) மத்திய அரசு கடந்த அக்டோபர் மாதம் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.

தற்போது கருப்பு பணம் விவகாரம் தொடர்பாக 60 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கையை மத்திய அரசு தொடங்கியது என்று தகவல் தெரிவித்துள்ளது. வெளிநாட்டு வங்கிகளில் சட்ட விரோதமாக பதுக்கிய பணம் ரூ. 1500 கோடியை தாண்டுமாம்.

தற்போது மத்திய அரசு சட்டநடவடிக்கை தொடங்கியது தொடர்பான 60 பேர் கொண்ட பட்டியலில் பெரிய கார்ப்பரேட் தனியார் நிறுவனங்களுடன் தொடர்புடையவர்களும் அடங்குவர் என்றும் தகவல்கள் தெரிவித்துள்ளன.

வெளிநாட்டு வங்கி கணக்குகள் மூலம் வரிஏய்ப்பு செய்த காரணத்திற்காக மட்டும் 60 பேருக்கு எதிராக முதற்கட்ட விசாரணையை வருமானவரி துறையினர் மேற்கொண்டனர்.

இரட்டை வரிவிதிப்பு ஒப்பந்தஙகளின்படி, நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு பின்னரே தனிபட்ட விசாரணைக்கு உட்படுத்த முடியும். அதன்படியே சட்டப்படியான நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளது என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

கருப்பு பணம் தொடர்பாக விசாரணை நடத்திவரும் சிறப்பு புலனாய்வு குழுவின் தலைமை நீதிபதி எம்.பி.ஷா தனியார் செய்தி தொலைக்காட்சிக்கு பேட்டி அளிக்கையில்,

“உச்ச நீதிமன்றத்தில் நிர்ணயம் செய்யப்பட்ட காலக்கெடு, மார்ச் -31ஆம் தேதிக்குள் விசாரணை முடிக்கப்பட்டுவிடும் என்று கூறியுள்ளார்.

வெளிநாட்டில் சட்டத்திற்கு புறம்பாக கணக்கு வைத்திருக்கும் 200-க்கும் மேலாணவர்களுக்கு விசாரணைக்கான ஒப்புதல் கடிதம் வழங்கப்பட்டுள்ளது அவை நவம்பர் இறுதிக்குள் உறுதிசெய்யப்படும்.

வெளிநாட்டில் கணக்கு வைத்துள்ளவர்களில் 100 பேர் பட்டியல் சரிபார்க்கப்பட்டுள்ளது. மொத்தம் 627 கணக்குகளில் 400 பேர் இந்தியர்கள் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.