Home நாடு கிள்ளானில் பிரபல நகைக்கடையில் வாயுக்கலன் வெடித்தது – ஒருவர் பலி

கிள்ளானில் பிரபல நகைக்கடையில் வாயுக்கலன் வெடித்தது – ஒருவர் பலி

457
0
SHARE
Ad

10893537_821488931258435_1259269791_nகிள்ளான், பிப்ரவரி 11 – கிள்ளான் ஜாலான் தெங்கு கெளானாவிலுள்ள இரண்டு பிரபல நகைக்கடைகளில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் இந்திய நாட்டைச் சேர்ந்த தொழிலாளி ஒருவர் மரணமடைந்தார். கடைக்குள் இருந்த மற்றொரு தொழிலாளியைக் காணவில்லை என்று கூறப்படுகின்றது.

இன்று காலை 2.30 மணியளவில் வாயுக்கலன் ஒன்று வெடித்ததில் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் கடையின் முதல் மாடியில் தங்கியிருந்த 6 தொழிலாளர்களில், 4 பேர் தப்பித்துள்ளனர். இருவர் தீயில் சிக்கிக் கொண்டதாக தெற்கு கிள்ளான் ஓசிபிடி துணை ஆணையர் கமாருல் சமான் மாமட் கூறியுள்ளார்.

தீயில் சிக்கிக் கொண்ட இருவரில் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இடிபாடுகளுக்கு இடையில் மற்றொருவரைத் தேடும் பணி நடைபெற்றுவருவதாகவும் கமாருல் குறிப்பிட்டுள்ளார்.

#TamilSchoolmychoice