Home வணிகம்/தொழில் நுட்பம் ஐரோப்பாவில் பெரும் முதலீட்டில் இரு தகவல் மையங்களை அமைக்கிறது ஆப்பிள்! 

ஐரோப்பாவில் பெரும் முதலீட்டில் இரு தகவல் மையங்களை அமைக்கிறது ஆப்பிள்! 

583
0
SHARE
Ad

Apple-Store-logoகோலாலம்பூர், பிப்ரவரி 24 – ஆப்பிள் நிறுவனம் ஐரோப்பாவில் 1.9 பில்லியன் டாலர்கள் மதிப்பில் இரண்டு தகவல் மையங்களை நிறுவ இருப்பதாக அறிவித்துள்ளது.

மேலும் இந்த மையங்களுக்கான மின்சாரப் பயன்பாடுகள் அனைத்தும் சுற்றுப்புறச் சூழலை பாதிக்காத புதுப்பிக்கத்தக்க ஆற்றலில் இருந்து பெறப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஆப்பிள் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-

“ஐயர்லாந்து மற்றும் டென்மார்க்கில் உருவாக்கப்பட இருக்கும் இந்த மையங்கள் மூலமாக ஐரோப்பாவில் உள்ள பல்வேறு நாடுகளுக்கு ‘ஐடியூன்’ (iTune), ‘ஐமெசேஜ்’ (iMessage), ‘சிறி’ (Siri) போன்ற வசதிகளுக்கான இணைய சேவையை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இரு மையங்களும் எதிர்வரும் 2017-ம் ஆண்டு முதல் செயல்படும் என எதிர்பார்க்கலாம்” என்று தெரிவித்துள்ளது.

#TamilSchoolmychoice

ஆப்பிள், ஐரோப்பாவில் தகவல் மையங்கள் அமைக்க இருப்பது அதிக முக்கியத்துவம் பெறுவதற்கான காரணம், அந்நிறுவனம் ஐயர்லாந்து மற்றும் டென்மார்க்கில் அமைக்க இருக்கும் தகவல் மையங்கள் இரண்டும் உலக அளவில் மிகப் பெரியதாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

இந்த தகவலை டென்மார்க் அரசும் உறுதிபடுத்தியுள்ளது. இது குறித்து ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி டிம் குக் கூறுகையில், “ஐரோப்பாவில் ஆப்பிள் ஏற்படுத்த இருக்கும் மிகப் பெரும் முதலீடு இதுவாகத்தான் இருக்கும்”.

“மேலும், இங்கு சுற்றுச்சூழலை பாதிக்காத கட்டமைப்புகள் எழுப்பப்பட இருக்கின்றனர். இதன் மூலம் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு ஆப்பிள் கொடுக்கும் முக்கியத்துவம் அனைவருக்கும் தெரியவரும்” என்று கூறியுள்ளார்.