Home நாடு அன்வாருக்கு துணைப் பிரதமர் பதவி விவகாரம்: மொகிதின் யாசின் மௌனம்!

அன்வாருக்கு துணைப் பிரதமர் பதவி விவகாரம்: மொகிதின் யாசின் மௌனம்!

611
0
SHARE
Ad

muhyiddin-yassin1புத்ரா ஜெயா, பிப்ரவரி 25 – எதிர்கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமுக்கு துணைப் பிரதமர் பதவி வழங்கப்பட இருந்ததாக வெளியான தகவல் குறித்து கவலைப்படுவதை விட, தாம் கவனம் செலுத்த வேண்டிய விஷயங்கள் பல உள்ளன என்று துணைப் பிரதமர் மொகிதின் யாசின் தெரிவித்துள்ளார்.

செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய அவர், அன்வாருக்கு துணைப் பிரதமர் பதவி வழங்கப்பட இருந்ததாக வெளியான தகவல் உண்மையா அல்லது பொய்யா என்பது தமக்குத் தெரியாது என்றும் கூறியுள்ளார்.

“உபயோகமற்ற எந்தவொரு விவகாரத்திலும் தலையிட நான் விரும்பவில்லை. பதவிகளுக்காக போராடிக் கொண்டிருப்பதைக் காட்டிலும், கவனம் செலுத்த வேண்டிய விஷயங்கள் ஏராளமாக உள்ளன.

#TamilSchoolmychoice

“இத்தகைய தகவல்கள் தங்களிடம் தாக்கத்தை ஏற்படுத்த பொதுமக்கள் அனுமதிக்கக் கூடாது. ஏனெனில் தங்கள் தலைவர்களிடம் இருந்து பொதுமக்கள் எதிர்பார்ப்பதும் இதுவல்ல,” என்றார் மொகிதின் யாசின்.

கடந்த பொதுத்தேர்தல் முடிந்த பின்னர் அன்வார் இப்ராகிமுக்கு துணைப் பிரதமர் பதவி வழங்க பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் முன்வந்ததாக பிகேஆர் உதவித் தலைவர்கள் நூருல் இசா மற்றும் ரசிஃபி ரம்லி இருவரும் அண்மையில் கூறியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.