Home 13வது பொதுத் தேர்தல் கிட் சியாங் மற்றும் ஹடி அவாங் துணைப்பிரதமர்கள்- இந்தியர்களுக்கு வாய்ப்பில்லையா? – அன்வாரின் அறிவிப்பால் இந்தியர்கள்...

கிட் சியாங் மற்றும் ஹடி அவாங் துணைப்பிரதமர்கள்- இந்தியர்களுக்கு வாய்ப்பில்லையா? – அன்வாரின் அறிவிப்பால் இந்தியர்கள் ஏமாற்றம்!

638
0
SHARE
Ad

Anwar-slider--கோலாலம்பூர், மாரச் 1 –   எதிர்வரும் 13வது பொதுத்தேர்தலில் மக்கள் கூட்டணி ஆட்சிக்கு வரும் பட்சத்தில் பாஸ் தலைவர் டத்தோஸ்ரீ அப்துல் ஹடி அவாங் மற்றும் ஜசெக மூத்த தலைவர் லிம் கிட் சியாங் ஆகியோர் துணைப்பிரதமர்களாக நியமிக்கப்படலாம் என்று டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நேற்று சின் சியூ டெய்லிக்கு வழங்கிய நேர்காணலில் தெரிவித்துள்ளார்.

இந்தியர்களுக்கு முக்கியத்துவம் தராத அன்வார்

இரண்டு துணைப் பிரதமர்கள்  இருப்பதை மலேசிய அரசியலமைப்புச் சட்டம் தடுக்கவில்லை என்று தெரிவித்த அவர் இந்தியர்களைப் பற்றி ஏதும் குறிப்பிடாதது ஏமாற்றத்தையே அளிக்கிறது.

#TamilSchoolmychoice

ஏற்கனவே தேசிய முன்னணியும் இந்தியர்களுக்கு துணைப்பிரதமர் பதவி பற்றி இதுவரை ஏதும் தெரிவிக்கவில்லை. இந்த நிலையில் அன்வாரும் தன்னுடைய இந்த அறிவிப்பால் இந்தியர்களுக்கு ஏமாற்றத்தை அளித்திருக்கின்றார்.

மக்கள் கூட்டணி வெளியிட்ட பொதுத் தேர்தல் கொள்கை விளக்க அறிக்கையில் இந்தியர்களுக்கு எந்தவித சலுகைகளும் சிறப்பு கவனமும் இல்லை என்ற குறைபாடுகள் பரவலாக எழுந்துள்ள நிலையில் பல தேசிய முன்னணி தலைவர்களும் இந்திய சமுதாய தலைவர்களும் நாள்தோறும்  மக்கள் கூட்டணியின் கொள்கை விளக்க அறிக்கையைச் சாடி அறிக்கை விட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.

இந்நிலையில் சீன சமுதாயத்தை அங்கீகரிக்கும் வகையில் அவர்களுக்கு துணைப் பிரதமர் பதவியை அறிவித்திருக்கும் அன்வார் இப்ராகிம், இந்திய சமுதாயத்திற்கு அவ்வாறு கௌரவம் தராதது மட்டுமல்ல, கூடுதல் அமைச்சர்கள் உண்டா இல்லையா என்பது குறித்து கூட இதுவரை எந்த அறிவிப்பும் செய்யவில்லை.

இதுவும்  இந்தியர்களிடையே நிச்சயம் அதிருப்தியை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை.

 பினாங்கில் முன்னுதாரணமாக விளங்கிய ஜ.செ.க 

பினாங்கில் கடந்த 2008ஆம் பொதுத் தேர்தலில் வென்றதும் முதன் முறையாக இந்தியர் ஒருவருக்கு – பேராசிரியர் ராமசாமிக்கு- துணை முதல்வர் பதவியைக் கொடுத்து ஜ.செ.க ஒரு முன்னுதாரணத்தை ஆரம்பித்து வைத்தது.

அந்த அடிப்படையில் இதை ஏன் ஒரு முன்னுதாரணமாக  தேசிய முன்னணியோஅல்லது மக்கள் கூட்டணியோ எடுத்துக்கொள்ளக்கூடாது? இனிமேலாவது அக்கட்சித் தலைவர்கள் யோசித்தால் நல்லது.

இந்தியர்கள் எதிர்வரும் பொதுத் தேர்தலில் தங்களுக்கென சில உரிமைகளை எதிர்பார்க்கின்றார்கள். தங்களுக்கென சில சிறப்பு சலுகைகளை எதிர்பார்க்கின்றார்கள்.

அந்த வகையில், இந்திய சமுதாயத்திற்கு துணைப் பிரதமர் என்ற வாக்குறுதியை அளிக்கும் கட்சிக்குத்தான் பெரும்பாலான இந்திய வாக்காளர்களும் வாக்களிப்பார்கள் என உறுதியாக நம்பலாம்.