பிரிஸ்பேன், மார்ச் 2 – உலகக் கோப்பை போட்டியின் 23-ஆவது லிக் ஆட்டத்தில் ஜிம்பாவே அணியை வீழ்த்தி, முதல் வெற்றியை பதிவு செய்தது பாகிஸ்தான். பிரிஸ்பேனில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் – ஜிம்பாவே அணிகள் மோதின.
இதில் முதலில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்கத்திலேயே பாகிஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான ஜாம்ஷெட் மற்றும் அகமது ஷேசாத் ஆகியோர் அவுட் ஆகினர்.
பின்னர் இணைந்த ஹாரிஸ் மற்றும் மிஸ்பா ஆகியோர் நிதான ஆட்டத்தை வெளிபடுத்தினர். எனினும் ஹாரிஸ் சோகைல் 27 ரன்னில் ஆட்டமிழந்தார். இறுதியில் பாகிஸ்தான் அணி 7 விக்கெட்டு இழப்பிற்கு 235 ரன்கள் எடுத்தது.
அணியில் அதிகபட்சமாக மிஸ்பா 73 ரன்களும், ரியாஸ் 54 ரன்களும் எடுத்திருந்தனர். பின்னர் சுலப இலக்கை நோக்கி ஆட துவங்கியது ஜிம்பாவே.
தொடக்கத்திலேயே முகமது இர்பானின் பவுன்சர் பந்து வீச்சில் சிபாபா 9 ரன்னிலும், சிகந்தர் 8 ரன்னிலும் வெளியேறினர். பின் வந்த மசகட்சா 29 ரன்னில் ஆட்டமிழந்தார்.
ஜிம்பாவே அணி வலுவான இடத்தில் இருந்த போது எதிர்பாராவிதமாக பிரன்டன் டெய்லர் 50 ரன்னில் அவுட்டானார். இறுதியில் ஜிம்பாவே அணி 215 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. இதனால் பாகிஸ்தான் அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் முதல் வெற்றி பெற்றது.