Home கலை உலகம் பன்றிக் காய்ச்சல் பீதி; தடுப்பூசி போட்டுக் கொண்ட திரிஷா!

பன்றிக் காய்ச்சல் பீதி; தடுப்பூசி போட்டுக் கொண்ட திரிஷா!

637
0
SHARE
Ad

Trisha Swine Flu,சென்னை, மார்ச் 4 – தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம்வந்ரவர் நடிகை திரிஷா. இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த ‘என்னை அறிந்தால்’ படம் பெரிய அளவில் வெற்றி பெற்றது. தற்போது ஜெயம் ரவியுடன் ‘அப்பாடக்கர்’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பின் போது பன்றி காய்ச்சல் பீதியை வெளிப்படுத்தும் விதமாக ஜெயம் ரவி-திரிஷா மற்றும் இயக்குனர் சுராஜ் ஆகியோர் முகத்தில் முகமூடி அணிந்தபடி இருந்த புகைப்படங்களை வெளியிட்டிருந்தனர்.

இந்த புகைப்படத்தை திரிஷா தனது டுவிட்டர் பக்கத்திலும் வெளியிட்டிருந்தார்.  தற்போது பன்றிக் காய்ச்சலுக்கான தடுப்பூசியை திரிஷா போட்டுக் கொண்டதாக அவரது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். கூடவே அவர் தடுப்பூசி போடும்போது எடுத்துக் கொண்ட புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார்.

#TamilSchoolmychoice

trisha jayam,இதனால் திரிஷாவுக்கு பன்றிக் காய்ச்சல் ஏற்பட்டுள்ளதா? என அனைவருக்கும் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. ஆனால், திரிஷாவோ தனக்கு பன்றிக்காய்ச்சல் ஏதும் இல்லையென்றும், நலமாக இருப்பதாகவும், முன்னெச்சரிக்கைக்காக தடுப்பூசி போட்டுக் கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.

ஏற்கெனவே, பாலிவுட் நடிகை சோனம் கபூர் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மும்பை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.  திரிஷா நடிப்பில் ‘பூலோகம்’ படம் அனைத்து பணிகளும் முடிவடைந்து வெளியிட்டிற்கு தயாராக இருக்கிறது.

மேலும் ஒரு தெலுங்கு படத்திலும் நடித்து வருகிறார். இந்த வருடத்தில் தொழிலதிபரும், தயாரிப்பாளருமான வருண் மணியனை திருமணம் செய்துகொள்ள இருக்கிறார். இவர்களது நிச்சயதார்த்தம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடந்து முடிந்தது குறிப்பிடத்தக்கது.