Home அவசியம் படிக்க வேண்டியவை ஐரோப்பாவிற்கு மீண்டும் நேரடி விமான சேவை – ஏர் ஏசியா அறிவிப்பு! 

ஐரோப்பாவிற்கு மீண்டும் நேரடி விமான சேவை – ஏர் ஏசியா அறிவிப்பு! 

597
0
SHARE
Ad

AirAsia_02சிட்னி, மார்ச் 13 – 2016-ம் ஆண்டு முதல் ஐரோப்பாவிற்கு மீண்டும் நேரடி விமான சேவையை தொடங்க இருப்பதாக ஏர் ஏசியா நிறுவனத்தின் தலைமை நிர்வாகி டோனி பெர்னாண்டஸ் தெரிவித்துள்ளார். சிட்னியில் நடந்த பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில், இது குறித்து டோனி கூறியதாவது:-

“ஐரோப்பாவிற்கு மீண்டும் ஏர் ஏசியாவின் விமான சேவையை தொடங்குவதற்கான நேரம் வந்துவிட்டது. தினமும் வாடிக்கையாளர்களிடம் இருந்து ஆயிரக்கணக்கான டுவிட்டர் பதிவுகள் இது தொடர்பாக தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றன. எனவே இதனை அறிவிக்க இதுவே சரியான தருணம்.”

“லண்டன் மற்றும் பாரிஸ் நகரங்களுக்கான ஏர்பஸ் விமான சேவை கடந்த 2012-ம் ஆண்டு முதல் நிறுத்தப்பட்டு இருந்தது. இந்நிலையில் ஏர் ஏசியா எக்ஸ் விமானங்கள் அடுத்த வருடம் முதல் லண்டன் நகரத்திற்கான விமான சேவையை தொடங்கும்” என்று கூறியுள்ளார்.

#TamilSchoolmychoice

மேலும் அவர் இந்தோனேசிய கடலில் விழுந்த ஏர் ஏசியா விமானம் QZ8501-ன் தேடுதல் வேட்டை பற்றி கூறுகையில், “ஏர் ஏசியா விமானம் QZ8501-ன் பயணிகளின் உடல்களை தேடும் பணி இன்னும் 7 முதல் 10 நாட்களுக்கு மட்டும் நீடிக்கும்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.