Home நாடு நஜிப்புக்கு தேமு கூட்டணிக் கட்சிகள் முழுமையான ஆதரவு!

நஜிப்புக்கு தேமு கூட்டணிக் கட்சிகள் முழுமையான ஆதரவு!

520
0
SHARE
Ad

Najib-Malaysia-Flagகோலாலம்பூர், மார்ச் 20 – தேசிய முன்னணி கூட்டணியில் அம்னோவோடு சேர்ந்த 12 உறுப்புக்கட்சிகள், பிரதமர் நஜிப் துன் ரசாக்கிற்கு ஒருங்கிணைந்த ஆதரவைத் தெரிவித்துள்ளன.

பிரதமர் நஜிப்பின் தலைமைத்துவம் தொடர வேண்டும் என்ற நோக்கத்தில் தங்களின் பிளவுபடாத  ஆதரவை வழங்குவதாக அக்கட்சிகளின் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே, கடந்த ஞாயிறுக்கிழமை 162 அம்னோ தொகுதித் தலைவர்கள் நஜிப்புக்கு தங்களின் முழு ஆதரவைத் தெரிவிப்பதாக உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

#TamilSchoolmychoice

“நாங்கள், தேசிய முன்னணியின் கூட்டணிக்கட்சிகளின் தலைவர்கள், பிரதமர் மற்றும் தேசிய முன்னணியின் தலைவர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கின் தலைமைத்துவத்திற்கு முழுமையான மற்றும் பிளவுபடாத ஆதரவைக் கொடுப்போம்” என்று உறுதிமொழி எடுக்கும் நிகழ்விற்குத் தலைமை வகித்த மசீச தலைவர் டத்தோஸ்ரீ லியாவ் தியாங் லாய் தெரிவித்துள்ளார்.